விண்டோசு செல்லிடத் தொலைபேசி
விண்டோசு செல்லிடத் தொலைபேசி என்பது இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஒரு நகர்பேசி இயங்குதளம் ஆகும். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் திறன்பேசி, பைக் கணினிகளுக்காக தயாரித்தது. [1] 2000 ஆம் ஆண்டில் பைக்கணினியாகத் தொடங்கப்பட்ட இது 2003 ஆம் ஆண்டில் விண்டோசு செல்லிடத்தொலைபேசி என பெயர்மாற்றம் பெற்றது. இதன் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இது தொழில் மற்றும் வணிகத்தின் வாடிக்கையாளர்களை நோக்காகக் கொண்டு வெளியிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மிகவும் பிரபலமான செல்லிடத் தொலைபேசியாக இது இருந்தது. ஆனால் 2010 இல் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளம் போன்றவைகளின் வருகையால் இதன் வளர்ச்சியானது குறையத் தொடங்கியது. இந்த இயங்குதளங்களுக்குப் போட்டியாக விண்டோசு செல்லிடத் தொலைபேசிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.ஆனால் அது தோல்வியில் முடிந்தது. விண்டோசு செல்லிடத் தொலைபேசியானது அதன் செல்லிடத் தொலைபேசி சாதனங்களிலும் மென்பொருள்களிலும் பொருந்துவதில் சிக்கல்கள் இருந்தன.[2] [3].[4]
விண்டோசு செல்லிடத் தொலைபேசி | |
நிறுவனம்/ விருத்தியாளர் |
மைக்ரோசாப்ட் |
---|---|
முதல் வெளியீடு | ஏப்ரல் 19, 2000 |
பிந்தைய நிலையான பதிப்பு | 6.5.3 / பெப்ரவரி 2, 2010 |
Marketing target | செல்லிடத் தொலைபேசி |
கேர்னர்ல் வகை | கலப்பினத் தொகுதி |
இயல்பிருப்பு பயனர் இடைமுகம் | வரைபட பயனர் இடைமுகப்பு |
வசதிகள்
இயல்புநிலை வசதிகள்
பெரும்பாலான விண்டோசு செல்லிடத் தொலைபேசிகள் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தன. குறிப்பாக பல்பணியாக்கம் போன்றவை. இதில் இயல்புநிலை இணைய உலாவியாக செல்லிடத் தொலைபேசிகளுக்கான இன்டெர்நெட் எக்சுபுளோரர் இருந்தது. இயல்புநிலை ஊடக இயக்கியாக விண்டோசு மீடியா பிளேயர் இருந்தது. இயல்புநிலையாக செல்லிடத் தொலைபேசி பதிப்பான மைக்ரோசாப்ட் ஆபிஸ் உள்ளது.
இணைய இணைப்புப் பகிர்தல்
விண்டோசு செல்லிடத் தொலைபேசிகளில் உள்ள இணைய வசதியை கணிப்பொறி உள்ளிட்ட சாதனங்களுக்கு அகிலத் தொடர் பாட்டை மூலம் அனுப்பும் வசதியைக் கொண்டிருந்தது.
முகப்புத் திரை
பதிப்புகளுக்குத் தகுந்தாற்போல பயனர் இடைமுகத்தில் மாற்றங்கள் இருந்தன. இன்றைய திரை பின்பு முகப்புத் திரை என பெயர் மாற்றம் பெற்றது. இந்த முகப்புத் திரையில் தற்போதைய நேரம், உரிமையாளர் பற்றிய தகவல்கள், வரவிருக்கும் நிகழ்ச்சிகள், மின்னஞ்சல் போன்றவற்றைக் காண்பிக்கின்றது. மேலும் பணிப்பட்டை மூலமாக தற்போதைய நேரம், ஒலி அளவு, குறிப்பலை வலிமை போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
வரலாறு
விண்டோசு செல்லிடத் தொலைபேசியானது மைக்ரோசாப்ட் விண்டோசு சி இ வரைபட பயனர் வடிவமைப்பினை அடிப்படையாகக் கொண்டது. இது முதன் முதலில் பைக்கணினி 2000 என்ற பெயரில் வெளியானது. இதன் அடிப்படை செயலிகளானது செயலி நிரலாக்க இடைமுகத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டது. இதன் வடிவமைப்பு மற்றும் வசதிகள் ஆகியவை மேசைக் கணினி போன்றே வடிவமைக்கப்பட்டது.
துவக்கத்தில் வெளிவந்த விண்டோசு செல்லிடத் தொலைபேசிகள் எழுத்தாணியுடன் வந்தது. தேவையான கட்டளைகளை எழுத்தாணி கொண்டு திரையினைத் தட்டுவதன் மூலம் பயன்படுத்தலாம்.[5]
விண்டோசு செல்லிடத் தொலைபேசி- 2003
விண்டோசு செல்லிடத் தொலைபேசி- 2003 இன் குறிப்பெயர் ஓசோன். இது சூன் 23, 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இது விண்டோசு உட்பொறி அமைப்பு 4 ஐ அடிப்படையாகக் கொண்டது. [6] இது நான்கு பதிப்புகளில் வந்தது
விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - பைக் கணிப்பொறி முனைமப் பதிப்பு, விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - பைக் கணிப்பொறி தொழில் முறை பதிப்பு, விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - திறன்பேசிகளுக்கானது. மற்றும் விண்டோசு செல்லிடத் தொலைபேசி 2003 - பைக் கணிப்பொறி செல்லிடத் தொலைபேசி பதிப்பு.
விண்டோசு 5
விண்டோசு செல்லிடத் தொலைபேசி 5.0 வின் குறிப்பெயரானது மகினற்றோ (மேக்னட்டோ) ஆகும்.இது 2000 ஆம் ஆண்டில் வெளியானது. இது விண்டோசு உட்பொறி அமைப்பு 5 ஐ அடிப்படையாகக் கொண்டது.
விண்டோசு செல்லிடத் தொலைபேசி 5 ஆனது மைக்ரோசாப்ட் ஆபிஸ் நகர்பேசி பதிப்புடன் வந்தது. இதில் உள்ள எக்செல் நகர்பேசி பதிப்பில் வரைபடம் வரையக்கூடிய வசதிகளைக் கொண்டிருந்தது. மேலும் மைக்ரோசாப்ட் வேர்டு நகர்பேசி பதிப்பானது வரிசைப் பட்டியல் உள்ளீடு செய்யும் வசதிகளைக் கொண்டிருந்தது. மேலும் விண்டோசு மீடியா பிளேயர், மேம்படுத்தப்பட்ட புளூடூத், குவர்ட்டி விசைப்பலகை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
சான்றுகள்
- எவர்ஸ், ஜோரிஸ் (ஜனவரி 6, 2005). "மைக்ரோசாப்டின் திறன்பேசி". ஐடிஜி. பார்த்த நாள் சூலை14, 2011.
- ரெட்மாண்ட் சேனல் பார்ட்னர் :மைக்ரோசாப்ட் நகர்பேசி சாதனங்கள் தாய்ரிப்பதி நிறுத்தப் போகிறது மே, 9 மார்ச் 2012
- "புது வகையான விண்டோசு ஃபோன்". மைக்ரோசாப்ட் (சூன் 13, 2010). பார்த்த நாள் செப்டம்பர் 9, 2010.
- நிக்கோலஸ் கொலாக்கோவ்ஸ்கி (மார்ச் 15, 2010). "விண்டோசு போன் பொருந்துவதில் பிரச்சினைகள் உள்ளன: மைக்ரோசாப்ட்". eWeek.
- சார்லஸ் ஆர்தர் (அக்டோபர் 20, 2009). "Windows Mobile: where's the love? And where's the sales figure?". தெ கார்டியன் (இலண்டன்). https://www.theguardian.com/technology/blog/2009/oct/20/windows-mobile-reviews-negative.
- டி ஹெராரா கிரிஸ் விண்டோசு நகர்பேசி பதிப்பு. pocketpcfaq.com. செப்டம்பர் 6, 2007.