வி. எல். சி. ஊடக இயக்கி
வி. எல். சி. ஊடக இயக்கி (ஆங்கிலம்: VLC Media Player) என்பது ஓர் இலவச ஊடக இயக்கி ஆகும். இந்த மென்பொருள் கோப்புகள், குறுவட்டுக்கள், இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுக்கள் என்பனவற்றிலிருந்து காணொளிகளைத் திறக்கக் கூடியது.[1] வி. எல். சி. ஊடக இயக்கி தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது.
![]() | |
---|---|
![]() வி. எல். சி. ஊடக இயக்கி | |
தொடக்க வெளியீடு | பெப்ரவரி 1, 2001 |
மொழி | சி, சி++ |
இயக்கு முறைமை | க்னூ லினக்சு, விண்டோஸ் 2000 சேவைப் பொதி 4உம் அதற்குப் பிந்தியவையும், மாக் ஓ. எசு. |
கிடைக்கும் மொழி | 53 மொழிகள் |
மென்பொருள் வகைமை | ஊடக இயக்கி |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் பதிப்பு 2 மற்றும் அதற்குப் பிந்தியவை |
இணையத்தளம் | http://www.videolan.org/vlc |
வசதிகள்
வி. எல். சி. ஊடக இயக்கியானது காணொளிகள், ஒலிக் கோப்புகள் என்பனவற்றைத் திறக்கக் கூடியது.[2][3] இந்த மென்பொருளை இலகுவாகக் கையாள முடியும். அத்துடன் வி. எல். சி. ஊடக இயக்கியானது சக்தி வாய்ந்ததும் வேகமானதும் ஆகும். கோப்புக்கள், வட்டுக்கள் (குறுவட்டு, இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு), வலைப் புகைப்படக் கருவிகள், இணையத்தில் உள்ள காணொளிகள் என்பனவற்றைத் திறக்கக் கூடியது. முற்றிலும் இலவசமானதும் கட்டற்றதுமான வி. எல். சி. ஊடக இயக்கி விளம்பரங்கள் அற்ற மென்பொருளாகும். விண்டோஸ், லினக்சு, மாக் ஓ. எசு., யுனிக்ஸ் ஆகிய இயங்குதளங்களில் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.