வாழ்க்கைத்திறன்கள்
வாழ்க்கைத் திறன்(Life skills) என்பது அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும், சவால்களையும் மனிதர்கள் திறம்பட சமாளிக்க உதவும் தகவமைப்பையும் நேர்மறையான நடத்தைகளையும் குறிப்பதாகும்.[1] வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் வாழ்க்கைத்திறன் என்பதை உளவியல் திறன் என்றும் கூறலாம்[2].தினசரி மனித வாழ்க்கையில் பொதுவாக அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் கேள்விகளைக் கையாளப் பயன்படும் கல்வி அல்லது நேரடியான அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட மனிதத் திறன்களின் தொகுப்பாக இத்திறன்கள் கருதப்படுகின்றன. சமுதாய நெறிகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடத்தைகள் மற்றும் திறன்கள் மாறுபடுகின்றன. சமுகத்தின் நல்வாழ்வுக்காகவும் தனிநபர்களின் தனித்தன்மைகளை வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்ற தனித்திறமைகள் யாவும் வாழ்க்கைத்திறன்கள் என்றே கருதப்படுகின்றன.
கணக்கிடுதல் மற்றும் வகைப்படுத்தல்
யுனிசெஃப் மதிப்பீட்டு அலுவலகம் இத்தகைய உளநல திறன்களின் "உறுதியான பட்டியல் ஏதுமில்லை எனக் கூறுகிறது.
உதாரணமாக, முடிவெடுப்பது பெரும்பாலும் விமர்சன சிந்தனை ("என் விருப்பத்தேர்வுகள் என்ன?") மற்றும் மதிப்புகள் ("எனக்கு என்ன முக்கியம்?"), (நான் இதை எப்படி உணர்கிறேன்? திறன்களை சக்திவாய்ந்த நடத்தை விளைவுகளை உருவாக்குகிறது, குறிப்பாக இந்த அணுகுமுறை மற்ற மூலோபாயங்களால் ஆதரிக்கப்படுகிறது.
இருப்பினும், உளவியல் திறன்கள் மற்றும் தனிமனித திறமைகள் ஆகியவை பொதுவாக கல்வியறிவு மற்றும் எண்னறிவு திறன்களுடன் இணைந்து செயல்படுகின்றன என்று யுனிசெப் மதிப்பிடுகிறது. கலாச்சாரத்திற்கு கலச்சாரம் மற்றும் வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும் பண்பை இது பெற்றுள்ளதே இதற்கான காரணமாகும். கல்வி, சமூக மற்றும் உணர்வுப்பூர்வமான கற்றல் செயல்பாடுகளுக்கு இத்திறன்கள் உதவுகின்றன என்பதை யுனிசெப் ஏற்றுக் கொள்கிறது.[3]. வாழ்க்கைத் திறன் என்பது பல்வேறு தயாரிப்பு முறைகளின் ஒரு தொகுப்பாகும். நகைச்சுவை போன்ற பல திறன்களை ஒரே சமயத்தில் உருவாகி திறமைகளாலும் பயிற்சியாலும் வளர்ச்சியடைகின்றன. நகைச்சுவை உணர்வு சூழ்நிலையை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவும், அச்சூழ்நிலையை நல்லியல்பு நிலையை நோக்கி மாற்றிக்கொள்ளவும் ஒருவருக்கு உதவுகிறது. பயம், கோபம், மன அழுத்தம் ஆகியவற்றை புறந்தள்ளவும், மனிதன் ஒரு தரமான வாழ்க்கையை அடையவும் நகைச்சுவை உணர்வு அனுமதிக்கிறது[4]
உதாரணமாக, முடிவெடுத்தல் பெரும்பாலும் கூர்ந்தாய்வு சிந்தனை (என் விருப்பத்தேர்வுகள் என்ன?") மற்றும் மதிப்புகளில் தெளிவு ("எனக்கு என்ன முக்கியம்?"), (நான் இதை எப்படி உணர்கிறேன்? போன்ற வாழ்க்கைத்திறன்களின் சக்திவாய்ந்த நடத்தை விளைவுகளால் உருவாகிறது. குறிப்பாக இந்த அணுகுமுறை மற்ற கல்வி சார் அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது.
வாழ்க்கைத் திறன்கள் பொருளாதார அறிவிலிருந்து மாறுபட்டு [5] போதைபொருள்-தடுப்பு முதல் மன இறுக்க குறைபாடுகளைச் சமாளிக்க உதவும் மருத்துவ தொழில் நுட்பங்களில் பெரிதும் பயன்படுகின்றன.
வாழ்க்கை திறன்கள்
உலக சுகாதார அமைப்பின் டெல்பி முறை [6][7][8][9] மூலம் அடையாளம் காணப்பட்ட முக்கியமான வாழ்க்கைத் திறன்களில் சில:
- முடிவு செய்தல்
- சிக்கல் தீர்வு
- படைப்பாற்றல்
- மாற்று சிந்தனை
- தொடர்பாடல்
- உறவு
- சுய எச்சரிக்கை
- தன்னம்பிக்கை
- புரிதல்
- எதையும் தாங்கும் இதயம்
- ஒன்றுபடுதல்
K-12 க்காக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கைத் திறன்களுக்கான பாடத்திட்டம் வெற்றிகரமான சுதந்திரமான வாழ்க்கைக்குத் தேவையான தகவல்தொடர்பு மற்றும் நடைமுறை திறன்களை வலியுறுத்துகிறது, அதேபோல் தனி நபருக்கான-கல்வித் திட்டம் (IEP) மூலம் உடல் வளர்ச்சி குறைபாடுகள் / சிறப்பு கல்வி பெறும் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.(IEP).[9]
பெற்றோர் பராமரிப்பு: வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் இடம் [தொகு] வாழ்க்கை திறன் பெரும்பாலும் பெற்றோர்களால், மறைமுகமாக குழந்தைகளை கவனித்தல் மற்றும் அனுபவத்தின் மூலமோ அல்லது நேரடியாக ஒரு குறிப்பிட்ட திறனைக் கற்பிப்பதன் மூலமோ கற்றுக்கொடுக்கப்படுகிறது, பெற்றோர் பராமரிப்பு என்பது வாழ்க்கைத் திறன்களின் ஒரு குறிப்பிட்டதொகுப்பாக கருதப்படுகிறது, இது ஒரு நபருக்கு இயற்கையாகவோ அல்லது கற்பிப்பதன் மூலமோ பெறப்படுகிறது. கருவுற்ற காலத்திலும் குழந்தை பிறந்த பின்னும் பெற்றோர் பராமரிப்பில் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் திறன்களை ஒரு நபருக்கு கற்பிப்பதன் மூலம் குழந்தை வளர்ச்சியில் ஒருங்கிணைந்த கூடுதல் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துகிறது, மேலும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பெரியவர்களாகும் வரை நல்வழிப்படுத்தவும் வழிவகுக்கிறது.
பெற்றோரிடையே காணப்படும் குறைபாடுகள், விவாகரத்து அல்லது குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் (அதாவது போதைப்பொருள் பயன்பாடு அல்லது பிற ஆபத்தான நடத்தை போன்றவை) காரணமாக பாரம்பரிய குடும்ப கட்டமைப்புகள் மற்றும் ஆரோக்கியமான உறவுகள் முறிந்து போகும்போது பல வாழ்க்கைத் திறன்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு, முன்னாள் குழந்தைப் தொழிலாளர்களுக்கும், இந்தோனேசியாவில் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளுக்கும் குழந்தைத் துஷ்பிரயோகத்தின் மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கு உதவுவதற்காகவும், வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கின்றது. [10]
மாதிரிகள்: நடத்தை தடுப்பும் நேர்மறை வளர்ச்சியும் [தொகு] குறிப்பிட்ட வாழ்க்கைத் திறன் திட்டங்கள் சில நடத்தைகளை தடுக்கும் வகையில் கவனம் செலுத்துகையில், அவை ஒப்பீட்டளவில் பயனற்றவையாக உள்ளன. ஆராய்ச்சியின் அடிப்படையில், குடும்ப மற்றும் இளைஞர் சேவைகள் அமைப்பு, [11] யு.எஸ். சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் பிரிவு, குறைந்த விளைவை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு மாற்றாக நேர்மறையான இளைஞர் அபிவிருத்தி (PYD) தத்துவத்தை பரிந்துரைக்கிறது. PYD பழைய குறைப்பு மாதிரிகளுக்கு எதிரான ஒருவரின் தனிப்பட்ட பலங்களில் கவனம் செலுத்துகிறது.மேலும் பலவீனமான ஆனால்"சாத்தியமான" பலவீனங்கலில் கவனம் செலுத்த முனைகின்றது, நேர்மறை வளர்ச்சி மாதிரியால் வாழ்க்கைத் திறன்கள் பயிற்றுவிக்கப்பட்ட நபர்கள் தங்களைத் தற்காப்பு மாதிரியை விடவும் அதிகமான நம்பிக்கை, பயன், உணர்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதாக குடும்ப மற்றும் இளைஞர் சேவைகள் பணியகம் கண்டறிந்துள்ளது. [சான்று தேவை]
மேற்கோள்கள்
- Life Skills Education for Children and Adolescents in Schools, World Health Organization, 1997
- Best Thomas - A study on stress and its correlatives with family environment.
- http://casel.org/why-it-matters/what-is-sel/skills-competencies
- http://www.webmd.com/mental-health/tc/humor-therapy-topic-overview
- USA Funds Life Skills
- Dalkey, Norman; Helmer, Olaf (1963). "An Experimental Application of the Delphi Method to the use of experts". Management Science 9 (3): 458–467. doi:10.1287/mnsc.9.3.458.
- Bernice B. Brown (1968). "Delphi Process: A Methodology Used for the Elicitation of Opinions of Experts.": An earlier paper published by RAND (Document No: P-3925, 1968, 15 pages)
- Sackman, H. (1974), "Delphi Assessment: Expert Opinion, Forecasting and Group Process", R-1283-PR, April 1974. Brown, Thomas, "An Experiment in Probabilistic Forecasting", R-944-ARPA, 1972
- Harold A. Linstone, Murray Turoff (1975), The Delphi Method: Techniques and Applications, Reading, Mass.: Addison-Wesley, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-201-04294-8, http://is.njit.edu/pubs/delphibook/