சிக்கல் தீர்வு

சிக்கல் தீர்வு அல்லது பிரச்சினை தீர்வு என்பது அனைத்து மனிதருக்கும் தேவையான ஒரு அடிப்படைத் திறன். சிக்கல் தீர்ப்பு மனித சிந்தனையின் ஒரு பாகமாக அமைந்து, மனித செயல்களினூடாக வெளிப்படுகிறது. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் தொடக்கம் நாடு உலகச் சிக்கல்கள் வரை சிக்கல் தீர்தல் முறைமைகள் தேவை. சிக்கல் தீர்பு முறைமைகள் பற்றி சிந்திக்காமல் அனுபவத்தினால் மேற்கொள்ளப்படம் எளிமையான நடத்தைகள் தொடக்கம் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட சிக்கல் தீர்பு முறைமைகள் என சிக்கல் தீர்பு பல நிலைகளைக் கொண்டுள்ளது.

வரையறை

சிக்கல் தீர்வு என்பது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, ஒரு இலக்கை நோக்கி அடைய தேவையான செயற்பாடுகளைக் கண்டறிவது ஆகும். தற்போதையை நிலை, இலக்கு நிலை, அவற்றுக்கு இடையே உள்ள தடைகள் தெளிவற்றதாக, இயங்கியல் தன்மை கொண்டதாக, complex ஆக அமையலாம். சிக்கல் தீர்வு என்னும் போது இவற்றை விவேகமாக கையாண்டு இலக்கை அடைவதைக் குறிக்கிறது.

கடுமையான சிக்கல்களின் பண்புகள்

  • தெளிவற்ற தன்மை - Intransparency
  • பல இலக்குகள் - - multiple goals
  • சிக்கல்தன்மை
  • பல கூறுகள்
  • பல தொடர்புகள்
  • பன்முகத்தன்மை
  • இயங்கியல்

சிக்கல் தீர்வு வழிமுறை

சிக்கலை கண்டுபிடித்து வரையறுத்தல்

என்ன சிக்கல், எதுவால் சிக்கல், ஏன் சிக்கல் முதற்கொண்டு சிக்கலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். சிக்கலை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதன்பின் தெளிவாக விபரித்து வரையறை செய்ய வேண்டும். சிக்கலின் பரப்பு என்ன, இலக்கு என்ன எனபதையும் துல்லியமாக வரையறுக்க வேண்டும். சில தருணங்களில் ஒரு குறிப்பிட்ட சிக்கலை தீர்பதற்கான அறிவு, ஆள், பொருள் வளம் தற்போது இல்லாமல் இருக்கலாம். அதை கவனித்து, அவற்றைப் பெற்று பின்னர் சிக்கல் தீர்க்கவரவேண்டும்.

சிக்கலுக்கான தீர்வுகளை வடிவமைத்து தேர்ந்தெடுத்தல்

ஒரு இடத்துக்கு செல்ல பல வழிகள் இருப்பது போல பல சிக்கல்களுக்கு பல தீர்வுகள் இருக்கலாம். அவற்றை அலசி, செலவு விளைவுகளை வரிசைப்படுத்தி பொருத்தமான தீர்வை தெரிவு செய்ய வேண்டும்.

தீர்வை நிறைவேற்றல்

மதிப்பிடுதல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.