வாழை இலை

வாழை இலை என்பது வாழை மரத்தின் இலையாகும். இது உணவு பரிமாறும் தட்டாகவும், அலங்காரப் பொருளாகவும், படையல் விரிப்பாகவும் மற்றும் சமையலிலும் பயன்படுகிறது. இந்து மற்றும் புத்த சமய பழக்கங்களில் அலங்காரப்பொருளாக பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உணவு கொள்ளும் தட்டாக பயன்படுகிறது.

வாழை இலையில் பூசை செய்யப்பட்ட பிரசாதம்

சமையல்

உணவு பரிமாறப்பட்டுள்ள வாழை இலை

வாழை இலையின் நீர் உறியாதன்மையாலும், வசதியாகயிருப்பதாலும் தென்னிந்தியா, பிலிப்பீன்சு, கம்போடியா உணவு வகைகள் பெரும்பாலும் இவ்விலையிலேயே பரிமாறப்படுகிறது. தமிழ் நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் முக்கிய விழாக்காலங்களில் வாழையிலையில் மட்டுமே உணவு பரிமாறப்படுகிறது. உணவின் மணத்தை அதிகரிக்க வாழை இலை பயன்படுகிறது. பதார்த்தங்களுடன் வேகவைப்பதால் மெல்லிய சுவை கொடுக்கிறது. மேலும் உணவை மடித்துக் கட்டவும் பயன்படுகிறது. இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது.[1] தமிழ் நாட்டில் இவ்விலையைக் காயவைத்தும் பயன்படுத்துகின்றனர். வாழைச் சருகு என்ற பெயரில் காய்ந்த இலைகள் உணவுக்கிண்ணங்களாக பயன்படுகின்றன. வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உணவு வகைகளிலும் வாழை இலை கொண்டு பொட்டலம் போடப்படுகிறது.

புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளில், வாழை இலையும் தோல் தாளும் பேஸ்ட்லஸ்களை (pasteles) உறையிடப் பயன்படுகின்றன. பச்சை வாழைப் பழமும், இறைச்சியும், வாழை இலையுடன் சேர்த்து வேகவைக்கப்பட்டு உணவின் சுவை கூட்டப்படுகிறது.

மெக்சிகோ மற்றும் வஃகாக்காவின் தமாள் மற்றும் ஆட்டுக் கறி அல்லது பார்பகோ தாக்கோ போன்ற உணவுவகைகள் வாழை இலையுடன் வேகவைக்கப்படுகிறது. ஹவாய் நாட்டினரும் வாழை இலையுடன் சமையல் செய்கின்றனர்.

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Banana". Hortpurdue.edu. பார்த்த நாள் 2009-04-16.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.