வால்லரு

வால்லரு (Wallaroo) என்னும் ஆஸ்திரேலிய விலங்கு பார்ப்பதற்கு கங்காரு போன்றே இருக்கும், ஆனால் இது அதனினும் சற்று சிறியது. கங்காரு இனத்தில் உள்ள 65 வகைகளில் இது ஒரு வகை விலங்கு. கங்காருவைப் போலவே இதுவும் பைப்பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவ்விலங்குகளுக்கும் பின்னங்கால்களைக் காட்டிலும் முன்னிரு கால்கள் குட்டையாக இருக்கும். இவ்வால்லருக்களில் நான்கு உள் வகைகள் உள்ளன.

வால்லருக்கள்
ஆஸ்திரேலிய வால்லரு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: பைப்பாலூட்டி
குடும்பம்: பருப் பின்னங்காலிகள் (Macropodidae)

மேலும் பார்க்க

உசாத்துணை

  • Groves, Colin (November 16, 2005). Wlson, D. E., and Reeder, D. M. (eds) Mammal Species of the World, 3rd edition, 63-65, Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.