கங்காரு

கங்காரு பாலூட்டிகளில் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகின்றன.

கங்காரு[1]
கீழைச் சாம்பல் நிற பெண் கங்காரு தன் குட்டியுடன்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
துணைவகுப்பு: மார்சூப்பியலியா
வரிசை: டைபுரோட்டோடோண்டியா
துணைவரிசை: மேக்ரோபோடிஃபோர்ம்ஸ்
குடும்பம்: மேக்ரோபோடிடே
பேரினம்: மேக்ரோபஸ்
பகுதியாக
இனம்

மேக்ரோபஸ் ரூஃபஸ்
மேக்ரோபஸ் ஜைஜான்டியஸ்
மேக்ரோபஸ் ஃபுலிஜினோஸஸ்
மேக்ரோபஸ் ஆன்டிலோபினஸ்

ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே விலங்கினம் கங்காருவாகும். இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப்பையினுள்ளே இருக்கின்றது.

கங்காருகள் அவற்றின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் கங்காருகளின் அதிப்படியான மேய்ச்சலினால் ஏற்படும் புல்வெளிகளின் இழப்பைத் தடுப்பதற்காகவும் சுட்டுக்கொல்லப்படுகின்றன.[2] கங்காரு இறைச்சியி்ல் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதால் மனிதர்களுக்கு நல்லதாகக் கருதப்படுகின்றது.[3]

மேற்கோள்கள்

  1. Colin Groves (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. பக். 64 & 66. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3.
  2. "Kangaroo Industry Background Kangaroo Industries Association of Australia. July 2008". Kangaroo-industry.asn.au (31 July 1997). மூல முகவரியிலிருந்து 5 February 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 April 2009.
  3. Dow, Steve (26 September 2007). "An industry that's under the gun". Sydney Morning Herald (Fairfax Media). http://www.smh.com.au/news/environment/an-industry-thats-under-the-gun/2007/09/25/1190486311919.html?page=fullpage. பார்த்த நாள்: 2 October 2011.

மேலும் பார்க்க


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.