வாலறிவன்

நமது அறிவு வலிமை பெற்று வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருடைய அறிவும் அவரவர் முன்னோர் விதையிலிருந்து சூழல் தரும் உரத்தால் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்த அறிவு வாலிபத் தன்மை கொண்ட வாலறிவு. வெளிச்சத்தால் கண் தெரிவதையும், காற்றலையால் காது கேட்பதையும் நமது அறிவு கண்டுபிடித்துக்கொள்கிறது. நம் அறிவு இத்தகைய வலிய வாலிபத் தன்மை பெற்று நம் மனத்தில் வளர்வது போல, இறையறிவு வாலிதாக (transparent) சரியோ தவறோ, நல்லதோ கட்டதோ எப்படிப்பட்டதாயினும் தாங்கிக்கொண்டு சரியாக இயங்கும் ஆற்றல் மிக்கதாக விளங்குகிறது. இறைவன் அறிவு நம் அறிவுக்குள் இருப்பினும் அது வேறுபட்டதாகவும் விளங்குகிறது. அது வானவெளிபோல் தூய்மையானது. வானவெளி அண்டங்களையும், ஆற்றல்களையும், தோன்றி மறையும் அறிவாற்றலையும் சுமந்துகொண்டு இயங்கும் பேராற்றல் மிக்கது. இந்த வாலறிவை வள்ளுவர் வாலறிவு என்கிறார்.

வாலறிவாக விளங்கும் வாலறிவனை அறிஞர்கள் பல்வேறு கோணகோணங்களில் பார்க்கின்றனர். மணக்குடவர் இந்த வாலறிவனை "விளங்கிய அடிவினை உடையவன்" என்கிறார். பரிமேலழகர் "மெய்யறிவினை உடையான்" என்கிறார். பரிதியார் "மேல் அறிவாளனான சிவன்" என்கிறார். காலிங்கர் "மாசற்ற அறிவுருவாகிய இறைவன்" என்கிறார். [1] புலவர் குழந்தை – உண்மையறிவு உடையவன் [2]

மேற்கோள்

  1. திருக்குறள் உரைக்கொத்து, திருப்பனந்தாள் மடம் வெளியீடு
  2. நூல் - திருக்குறள் புலவர் குழந்தை உரை, முதலியல், இறைநலம், பக்கம் 3
இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.