வாமதேவம்

வாமதேவம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களில் காத்தல் பணிபுரியும் ஒரு முகமாக கருதப்படுகிறது.

சிவ தோற்றம்

முப்பதாவது இரத்த கற்பத்தில் படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் சிவபெருமானை நினைத்து தியானித்த பொழுது, அவருடைய தியானித்தில் மகிழ்ந்த சிவபெருமான் சடாமுடியில் பாம்புகளையும், கைகளில் மால் மழு ஆகியவையும் தாங்கி காட்சியளித்தார். இத்தோற்றம் வாமதேவம் எனப்படுகிறது. இதனைப் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

சிவ முகம்

சிவபெருமான் ஐந்து முகங்களில் இரண்டாவது முகமாகும். இம்முகம் வாமம் என்றும் அறியப்படுகிறது. இம்முகம் சிவப்பு நிறமுடையதெனவும், வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளாகவும் அறியப்படுகிறது. சிவபெருமான் இம்முகம் வாயிலாக சந்தியா தாண்டவம் ஆடி காத்தல் பணிபுரிகின்றார்.பஞ்சபூதங்களில் நீரின் தன்மை வாய்ந்ததாக இம்முகம் அறியப்படுகிறது.

சிவபெருமான் வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூட்சுமம், ஸகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் என ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார். [2]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=10974 லிங்க புராணம் - தினமலர் கோயில்கள் தளம்
  2. http://www.ammandharsanam.com/magazine/April2012unicode/page027.php ஆகம சாஸ்திரம் சுப்ரமணிய சிவாச்சார்யா அம்மன் தரிசனம் இணையதளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.