வான்கூவர் தீவு

வான்கூவர் தீவு கனடாவின் கரையோரத்தின் அருகில் , வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ளது. இது கனடாவின் மாகாணமாகிய பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு பகுதியாகும். வான்கூவர் தீவு 460 கிலோமீட்டர் (290 மைல்) நீளமும்[1], அதன் அகலமான பகுதியில் 100 கிமீ (62 மைல்) அகலமும் மற்றும் 32,134 கிமீ 2 (12,407 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. இது வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் மிகப்பெரிய தீவு ஆகும். இந்த பகுதி தான் கனடாவின் வெப்பமான காலநிலைகளை கொண்டுள்ளது. வான்கூவர் தீவின் மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 799,400 ஆக இருந்தது.[2] இந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதி மக்கள் (367,770) உயரிய விக்டோரியாவின் பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர்.வான்கூவர் தீவில் குறிப்பிடத்தக்க பிற நகரங்கள் : அல்பெர்னி துறைமுகம், பார்க்ஸ்வில்லே, கோர்டர்னே, நனைமோ மற்றும் கேம்ப்பேல் நதி. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகரான விக்டோரியா, வான்கூவர் தீவில் அமைந்துள்ளது. ஆனால் மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான வான்கூவர் இத்திவுனில் இல்லை. வான்கூவர் நகரமானது வட அமெரிக்க நிலப்பரப்பில் உள்ளது. இந்நகரம் ஜார்ஜியாவின் ஜலசந்தி அருகே உள்ளது. வான்கூவர் தீவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல உள்நாட்டு மக்களுக்கு தாயகமாக உள்ளது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வான்கூவர் தீவு, பிரிட்டிஷ் மற்றும் ஸ்பானிஷ் நாடுகளால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த தீவு பிரிட்டிஷ் கடற்படை தலைவரான ஜார்ஜ் வான்கூவரின் பெயரைக் கொண்டு பெயரிடப்பட்டது.[3] 1791 மற்றும் 1794 ஆம் ஆண்டுகளுக்கு இடையே பசிபிக் வடமேற்கு கரையோரத்தை ஆய்வு செய்த ஜார்ஜ் வான்கூவரின் பெயரிடப்பட்ட பல வட அமெரிக்க இடங்களில் இத்தீவும் ஒன்றாகும்.வான்கூவர் தீவு உலகின் 43 வது பெரிய தீவாகும்.[4] கனடாவின் மிகப்பெரிய தீவுகளில் இது 11 ஆவது மிகப்பெரிய தீவாக உள்ளது. மான்ட்ரியல் தீவுக்குப் பிறகு இது கனடாவின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட தீவாகவும் வான்கூவர் தீவு உள்ளது.

மக்கள்தொகை

வான்கூவர் தீவின் மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 799,400 ஆக இருந்தது. இந்த மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதி மக்கள் (367,770) உயரிய விக்டோரியாவின் பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர்.

நிலவியல்

வான்கூவர் தீவு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது.இத்தீவின் மிகப்பெரிய நிலப்பரப்பை வான்கூவர் தீவின் மலைத்தொடர்கள் ஆக்கிரமித்துள்ளன. இது வான்கூவர் தீவை ஈரப்பதமான மற்றும் கரடுமுரடான மேற்கு கரையோரமாகவும், வறண்ட கிழக்கு கரையோரமாகவும் பிரிக்கிறது. கோல்டன் ஹின்டே எனப்படும் மலை இத்தீவின் மிக உயரமான மலையாக உள்ளது. இது 2,195 மீட்டர் (7,201 அடி) உயரம் கொண்டது.

நதிகள்

வான்கூவர் தீவில் பல ஆறுகள் உள்ளன. அவற்றில் சில சிறிய நதியாக இருந்தாலும் அதிதமான கொள்ளலவு கொண்டுள்ளது.மேலும் குறிப்பிடத்தக்க ஆறுகளில் அல்பெர்னி பள்ளத்தாக்கில் உள்ள சோமஸ் நதி, வடக்கு தீவு பகுதியில் உள்ள நம்ப்க்கிஷ் நதி, நானைமோவின் ஆங்கிலேயன் நதி மற்றும் காவிச்சன் நதி ஆகியவை மிக முக்கியமானவை ஆகும்.

தொழில்நுட்பம்

வான்கூவர் தீவின் மிகப் பெரிய நகரமான விக்டோரியாவில், குறிப்பிடத்தக்க தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத் தொழில் துறை ஆகியவை உள்ளன. விக்டோரியாவின் மேம்பட்ட தொழில்நுட்ப மன்றத்தின் வலைத்தளத்தின்படி, விக்டோரியா பகுதியில் 800 க்கும் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றால் வரும் மொத்த வருடாந்திர வருமானம் 1.95 பில்லியன் டாலர்கள்.[5] அதி வேக இணையதள சேவை ஷா தொடர்புமையம், டெலஸ் மற்றும் அவர்களது சொந்த வலைபின்னல்களுடன் பல்வேறு உள்ளூர் வழங்குநர்கள் மூலம் இத்தீவுக்கு வழங்கப்படுகிறது. கம்பியில்லாத இணைய சேவை இணைப்புகளை வான்கூவர் தீவு முழுவதும் காணலாம்.

மீன்பிடித் தொழில்

மீன்பிடித்தல் வான்கூவர் தீவில் உள்ள பலரின் வாழ்க்கையில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது. கடலோர மீன் பண்ணைகள் ஆண்டுதோறும் பல டன் பசிபிக் சால்மன் மீன்களை உற்பத்தி செய்கின்றன.[6]

கல்வி

வான்கூவர் தீவு ஒரு சில பல்கலைக்கழகங்கள், பல கல்லூரிகள், வர்த்தக-பள்ளிகள், நூற்றுக்கணக்கான பொதுப் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகளைக் கொண்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள்

  • விக்டோரியாவின் பல்கலைக்கழகம்
  • வான்கூவர் தீவு பல்கலைக்கழகம்
  • ராயல் ரோட்ஸ் பல்கலைக்கழகம்

கல்லூரிகள்

  • காமோசன் கல்லூரி
  • வடக்கு தீவு கல்லூரி

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.