வானவன் மறவன்

வானவன் மறவன் என்னும் தொடர் சேரனின் படைத்தலைவனைக் குறிக்கும். பிட்டன் என்னும் தலைவன் வானவன் மறவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.

இவன் நறவு என்னும் ஊரினன். சிறந்த வில்வீரன். [1]

சிறந்த வாள் வீரனும் ஆவான். அத்துடன் சிறந்த கொடைவள்ளலாகவும் விளங்கினான். இவனது நாடு குதிரைமலைப் பகுதி. எனவே நறவு என்னும் ஊரும் குதிரைமலைப் பகுதியில் இருந்தது என்பது புலனாகிறது.[2]

மேலும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. வானவன் மறவன் வணங்குவில் தடக்கை ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன் (இவனை எதிர்த்த பகைமன்னர்களின் வேல் துன்புற்றது போல இவன் கண்ணீர் நான் பிரியும்போது துன்பம் தருகிறது என்கிறான் தலைவன்) - அகம் 77
  2. வசையில் வெம்போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும் பொய்யா வாய்வாள் புனைகழல் பிட்டன் மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன் அகல் அறை நெடுஞ்சுனை (நீலம் போன்ற இவள் கண் அழுவது கண்டு நான் நோகிறேன் என்கிறான் தலைவன் - அகம் 143
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.