வாணி போஜன்

வாணி போஜன் (Vani Bhojan, பிறப்பு: 28 அக்டோபர், 1988) ஒரு தமிழ் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார்.[1] இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார்.[2] தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.[3]

வாணி போஜன்
பிறப்புஅக்டோபர் 28, 1988 (1988-10-28)
ஊட்டி, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை,தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சத்தியா, வாணி, சின்னத்திரை நயந்தாரா
கல்விஇளங்கலை (ஆங்கிலம்)
படித்த கல்வி நிறுவனங்கள்கலைக் கல்லூரி
பணி
  • நடிகை
  • மாடல்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012-இன்று
பெற்றோர்போஜன்,
பார்வதி
விருதுகள்சிறந்த நடிகைக்கான சன் குடும்ப விருது

வாழ்க்கைக் குறிப்பு

இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்ததார். இப்போது வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் ஆகிய சின்னத்திரைத் தொடர்களில் நடித்துவருகிறார்.

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை குறிப்பு
2012ஆஹாசுருதிவிஜய் தொலைக்காட்சி
2012மாயாமாயாஜெயா தொலைக்காட்சி
2013-2018தெய்வமகள்சத்யபிரியாசன் தொலைக்காட்சி
2015-2017லட்சுமி வந்தாச்சுநந்தினி, லட்சுமி, ஜான்சிஜீ தமிழ்
2016காமெடி ஜங்ஷன்சன் தொலைக்காட்சிவிருந்தினராக
2017அசத்தல் சுட்டிஸ்சன் தொலைக்காட்சிதலைவர்
2017-2018கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்விஜய் தொலைக்காட்சிதலைவர்

படங்கள்

ஆண்டு பெயர் நாயகன் மொழி விபரம்
2019மீக்கு மாத்ரமே செப்தாதருன் பாஸ்கர்தெலுங்கு அறிமுகம்
2020ஓ மை கடவுளேஅசோக் செல்வன்தமிழ் அறிமுகம்:

படப்பிடிப்பு

2020லாக் அப்வைபவ் ரெட்டிதமிழ் [4]

விருதுகள்

ஆண்டு விருது வகை பாத்திரம் முடிவு
2014 சன் குடும்பம் விருதுகள் சிறந்த நடிகை சத்தியா பரிந்துரை
2014 சன் குடும்பம் விருதுகள் தேவதைகள் சத்தியா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2018 சன் குடும்பம் விருதுகள் சிறந்த நடிகை சத்தியா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி
2018 கலாட்டா நட்சத்திர விருதுகள் சிறந்த நடிகை சத்தியப் பிரியா style="background: #99FF99; color: black; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2"|வெற்றி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.