வள்ளுவநாடு
கேரளத்தில் உள்ள பழைய அரசுப்பகுதிகளில் ஒன்று வள்ளுவநாடு.
பெரிந்தல்மண்ணை, மண்ணார்க்காடு, ஒற்றைப்பாலம் என்னும் வட்டங்களையும், பொன்னானி, திரூர், ஏறநாடு வட்டங்களின் சில பாகங்களும் சேர்ந்திருந்தது முற்காலத்து வள்ளுவநாடு.
இரண்டாம் சேர அரசுக் காலத்தில் வள்ளுவநாடு வல்லபட்சோணீ என்னும் சமஸ்கிருத பெயரைப் பெற்றது.
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜசேகரர் இந்த அரச வம்சத்தைத் தோற்றுவித்தார். இதை ஆறங்ஙோட்டுஸ்வரூபம் என அழைத்தனர்.
வள்ளுவநாட்டு அரசர்க்கு வள்ளுவக்கோனாதிரி, வெள்ளாட்டிரி, ஆறங்ஙோட்டு உடையவர், வல்லபன் என்ற பெயர்கள் உண்டு. இவருடைய குடும்பத்தில் உள்ள ஆண்மக்களை வள்ளோடிமார் என அழைப்பர்.
வள்ளுவநாட்டின் தலைநகரம் வள்ளுவநகரம். தற்காலத்தில், வள்ளுவநகரத்தை அங்ஙாடிப்புறம் என அழைக்கின்றனர்.
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.