வளர்விகித வரி

வளர்விகித வரி அல்லது வளர்வீத வரி (Progressive tax) வருமான வரி விதிக்கும் முறைகளில் ஒன்று. வரி விதிக்கத்தக்கத் தொகை கூடக்கூட வருமான வரி விகிதமும் கூடினால் அம்முறை வளர்விகித வரிவிதிப்பு எனப்படுகிறது.[1][2][3][4][5] இந்த வரிவிதிப்பு முறையில் சராசரி வரிவிகிதம் இறுதிநிலை வரிவிகிதத்தை விடக் குறைவானதாக இருக்கும்.[6][7] வரிகட்டும் ஆற்றல் குறைந்தவர்களின் வரிச்சுமையைக் குறைத்து, அதிக அளவு வரிகட்டக் கூடியவர்களிடம் அதிக வரி வசூலிக்கவே இம்முறை செயலாக்கப்படுகிறது. இவ்வரிவிதிப்பு முறைக்கு நேரெதிர் முறை தேய்வுவிகித வரி எனப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

  1. Webster (4b): increasing in rate as the base increases (a progressive tax)
  2. American Heritage (6). Increasing in rate as the taxable amount increases.
  3. Britannica Concise Encyclopedia: Tax levied at a rate that increases as the quantity subject to taxation increases.
  4. Princeton University WordNet: (n) progressive tax (any tax in which the rate increases as the amount subject to taxation increases)
  5. Sommerfeld, Ray M., Silvia A. Madeo, Kenneth E. Anderson, Betty R. Jackson (1992), Concepts of Taxation, Dryden Press: Fort Worth, TX
  6. Hyman, David M. (1990) Public Finance: A Contemporary Application of Theory to Policy, 3rd, Dryden Press: Chicago, IL
  7. James, Simon (1998) A Dictionary of Taxation, Edgar Elgar Publishing Limited: Northampton, MA
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.