வணிகச் சின்னம்

ஒரு தனிநபரோ, வணிக நிறுவனமோ, அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது பொருளையோ, சேவையையோ தனது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு வணிகச்சின்னம் அல்லது வர்த்தக்குறி (trademark)எனப்படும். இது ஒருவர் வழங்கும் பொருள் மற்றும் சேவையைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக் காட்ட உதவும்.

ஒரு வணிகச்சின்னம் என்பது கீழ்கண்ட குறிகளின் மூலம் குறிக்கப்படுகிறது.

  • ( பொருளைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க )
  • (சேவையைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க)
  • ® (பதிவிட்ட வணிகச்சின்னத்தைக் குறிக்க )

வணிகச்சின்னம் என்பது பொதுவாக பெயராகவோ, சொல்லாகவோ, சொற்றொடராகவோ, சின்னமாகவோ, இலச்சினையாகவோ, படமாகவோ, வடிவமைப்பாகவோ, அல்லது இவை கலந்தோ அமையப்பெறும். வழக்கமான இவை அல்லாது வண்ணம், மனம், ஓசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சில மரபுசாராத வணிகச்சின்னங்களும் உண்டு. எ.கா. - ஏர்டெல் கருப்பாடல் (theme song).

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.