வரணி மத்திய கல்லூரி

வரணி மத்திய கல்லூரி கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் வரணி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தரம் 1 முதல் உயர்தரம் வரையான வகுப்புக்கள் உள்ளன. உயர்தரத்தில் கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து ஆண்டு தோறும் குறிப்பிடத்தக்க மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகிறார்கள். எம்.டி.பண்டா என்பவரால் 11-01-1954 இல் திறந்துவைக்கப்பட்டது. இப்பாடசாலையில் 1963 ஆம் ஆண்டு முதல் க.பொ.த.உயர்தர வகுப்பில் விஞ்ஞானக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டு கல்வியமைச்சு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைத்துக்கொடுத்தது. உடையார் சிவா நல்லமாப்பாணர் இப்பாடசாலைக்கு வணக்க மண்டபம் ஒன்றை அமைத்துக்கொடுத்தார்.

இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

யா/வரணி மத்திய கல்லூரி
அமைவிடம்
வரணி யாழ்ப்பாணம், இலங்கை
தகவல்
வகைஅரசுப் பள்ளி
தொடக்கம்1954
தரங்கள்1–13
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.