வடுவூர் கே. துரைசாமி
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (1880-1942) ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
வாழ்க்கை வரலாறு
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த துரைசாமியின் தந்தையார் பெயர் கிருஷ்ணசாமி ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி, எழுதுவதற்காக வேலையைத் துறந்தார். இவரது மனைவி பெயர் நாமகிரி அம்மாள். தனது புதினங்களை அச்சிட சொந்தமாக அச்சகம் நடத்தினார். தன் படைப்புகளை வெளியிட ”மனோரஞ்சனி” என்ற மாத இதழையும் நடத்தினார். ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவி பல தமிழ் புதினங்களை எழுதினார். தமிழில் துப்பறியும் கதைகள் எழுதிய முன்னோடி எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர்.[1] இவரது மேனகா, திகம்பர சாமியார், மைனர் ராஜாமணி, பாலாமணி அல்லது பக்காத் திருடன், வித்யாபதி போன்ற புதினங்கள் திரைப்படமாக்கப்பட்டன. 2009ம் ஆண்டு இவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன.
படைப்புகள்
- மங்கையர் பகட்டு (1936 – 2)
- கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை (1942)
- மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம் (1942)
- டாக்டர் சோணாசலம் (1945)
- நங்கை மடவன்னம் (1946 – 3)
- பாவாடைச் சாமியார் (1946)
- முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம் (1947 )
- பச்சைக்காளி (1948)
- மருங்காபுரி மாயக் கொலை (1948)
- திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம் (1950)
- இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி (1951)
- சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளைமுழுங்கி (1951)
- சௌந்திரகோகிலம் மூன்று பாகங்கள் (1951 – 4)
- நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி (1951)
- பூஞ்சோலையம்மாள் (1951)
- பூர்ணசந்திரோதயம் நான்கு பாகங்கள் (1951 – 4)
- மாயாவினோதப் பரதேசி இரண்டு பாகங்கள் (1951 – 4)
- மேனகா இரண்டு பாகங்கள் (1951 – 7)
- வித்தியாசாகரம் (1951 – 6)
- சொக்கன் செட்டி (1952 – 2)
- துரைராஜா (1952 – 3)
- கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள் (1953 – 9)
- சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு (1953)
- பிச்சு முத்துக் கோனான் (1953 – 2)
- தங்கம்மாள் அல்லது தீரபுருஷனின் தியாக கம்பீரம் (1954)
- வசந்தமல்லிகா (1954 – 7)
- சிவராமக்ருஷ்ணன் (1955-3)
- மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தக்குப் பெப்பே! (1955)
- சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள் (1956 – 2)
- நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம் (1956)
- மதன கல்யாணி மூன்று பாகங்கள் (1956 – 6)
- திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்
- கனகாம்புஜம்
- காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் புதையல்
- திகம்பரசாமியார் பால்யலீலை
- தில்லை நாயகி
- திவான் லொடபடசிங் பகதூர்
- துரைக் கண்ணம்மாள்
- பன்னியூர் படாடோப சர்மா
- பாலாமணி
- மன்மதபுரியின் மூடு மந்திரம்
- மாய சுந்தரி
- மிஸிஸ் லைலா மோகினி
- லக்ஷ்மிகாந்தம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
- கை, ராண்டார் (18-06-2015). "Played many parts" (ஆங்கிலம்). தி இந்து. பார்த்த நாள் 09-04-2017.