ழூல் வேர்ண்
ழூல் வேர்ண் (ஜூல் வேர்ண்; Jules Verne; பெப்ரவரி 8, 1828 – மார்ச் 24 1905) ஒரு பிரெஞ்சு அறிபுனை எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ஹெச். ஜி. வெல்ஸ்). விண்வெளிப் பயணம், விமானப் பயணம், நீர்மூழ்கிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படும் முன்பே வேர்ண் தனது புதினங்களில் அவற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக மிக அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர் இவரே.[1] இவரது படைப்புகளில் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவாக 2008ம் ஆண்டு ஏவப்பட்ட ஒரு விண்கலத்துக்கு ழூல் வேர்ண் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ழூல் வேர்ண் | |
---|---|
![]() ழூல் வெர்ண் (ஃபீலிக்ஸ் நேடர் எடுத்த படம்) | |
பிறப்பு | ழூல் கேப்ரியல் வேர்ண் பெப்ரவரி 8, 1828 நாந்து, பிரான்சு |
இறப்பு | 24 மார்ச்சு 1905 ஏமியன், பிரான்சு | (age 77)
தொழில் | புதின எழுத்தாளர் |
நாடு | பிரான்சு |
இலக்கிய வகை | அறிபுனை, சாகசப் புனைவு |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
கட்டுரையில் பார்க்கவும் |
தாக்கங்கள்
| |
பின்பற்றுவோர்
| |
கையொப்பம் | ![]() |
குறிப்பிடத்தக்க படைப்புகள்
- Voyage au centre de la terre, 1864 (வொயாஃழ் ஒ சாந்த்ர டெ ல தெர் 1864)- நில உலகின் நடுவுக்குச் செலவு
- De la terre à la lune, 1865 ( டி ல தெர் அ லா லூன்) - நில உலகில் இருந்து நிலாவுக்கு.
- Vingt mille lieues sous les mers, 1869 (வெ(ன்) மீல் லியூ சூ லெ மெர், 1869) - கடல்களுக்கு அடியில் இருபதாயிரம் லீகுகள்.
- Le tour du monde en quatre-vingts jours, 1874 (லெ டு டி மான் அன் கேஅத்ர-வேன் ஃழூர்) - எண்பது நாட்களில் உலக உலா, 1872
- L'Île mystérieuse, 1874 (லீல் மிசுடெரியூசு) - மாயத்தீவு, 1974.
மேற்கோள்கள்
- Unesco. "Most Translated Authors of All Time". Index Translationum. பார்த்த நாள் 2008-11-08.
இவற்றையும் பார்க்க
சிக்கலான விஷயத்தை எளிய மொழியில் சொல்லும் கலையைஹெட்செல் எனும் பதிப்பாளர் சொல்லித்தந்தார் ;சந்தோஷமான முடிவுகளையும் வைக்க அவர் அறிவுரை தந்தார் .அப்படியே செய்தார் இவர் ; நிலவுக்கு பூமியில் இருந்து போவதாக அப்பொழுதே கதை எழுதினார் .
நூல்கள்
அவரின் நூல்கள் உலக அளவில் அகதா கிறிஸ்டிக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்க பட்டுள்ளது . பூமியில் இருந்து வான்நோக்கி ஒரு மனிதன் எழுகிற சிலை அவரின் நினைவிடத்தில் இருக்க நீங்காத்துயில் கொண்டிருக்கிறார் அவர் . முடிவில்லா அற்புதங்களை நோக்கிய தேடல்கள் என்றைக்கும் மனித குலத்தை முன்னணியில் வைத்திருக்கும் என்றார் அவர் .".தங்க எரிமலை "எனும் அவரின் நூலின் தலைப்பை போலவே சாகசத்தை பொற்குழம்பு போல - உமிழ்ந்த அவரின் பிறந்தநாள் இன்று.
வெளி இணைப்புகள்
ஜூல்ஸ் வெர்னே புனைகதை எழுத்தாளர் பிறந்த தின சிறப்பு பகிர்வு விகடன்