அகதா கிறிஸ்டி
அகதா கிறிஸ்டி (Agatha Christie, செப்டம்பர் 15 1890 - ஜனவரி 12 1976), உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். மேரி வெஸ்ட்மாகொட் (Mary Westmacott) என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படுகிறார்.
டாம் அகதா கிறிஸ்டி DBE | |
---|---|
![]() | |
புனைப்பெயர் | மேரி வெஸ்ட்மாகொட் |
தொழில் | புதினம், சிறுகலை எழுத்தாளர், நாடகாசிரியர், கவிஞர் |
நாடு | British |
இலக்கிய வகை | குற்றப்புனைவு, திகில் புனைவு, துப்பறிவுப் புனைவு, காதல் புனைவு |
இயக்கம் | துப்பறிவுப்புனைவின் பொற்காலம் |
துணைவர்(கள்) | ஆர்க்கிபால்ட் கிறிஸ்டி(1914–1928) மேக்ஸ் மல்லோவன் (1930–1976; இறப்பு) |
பிள்ளைகள் | ரோசலின்ட் ஹிக்ஸ்(1919–2004) |
தாக்கங்கள்
| |
http://www.agathachristie.com |
இவரது மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap ) 1952 நவம்பர் 25 இல் முதலில் திரையிடப்பட்டது. அது 2006 இலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு சாதனை படைத்துள்ளது.
ஓர் அமெரிக்கத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்தவரான அகதா கிறிஸ்டி ஒருபோதும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருக்கவோ அதற்காக விண்ணப்பிக்கவோ இல்லை.
வெளி இணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.