லோசான்

லோசான் (Lausanne, loˈzan) சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழிப் பேசும் பகுதியில் உள்ள ரோமண்டியில் உள்ள ஓர் நகரமாகும். வாட் கன்டனின் தலைநகரமும் ஆகும். லோசான் மாவட்டத் தலைநகரும் இதுவே. ஜெனிவா ஏரியின் கரையில் அமைந்துள்ளது.[1] லோசன் வடமேற்கில் ஜூரா மலைகளைக் கொண்டு பிரான்சின் எல்லை நகரான எவியன் லெ பெய்ன்சை எதிர் நோக்கி அமைந்துள்ளது. லோசான் ஜெனிவாவிலிருந்து வடகிழக்கில் 62 km (39 mi) உள்ளது.

லோசான்
நாடு சுவிட்சர்லாந்து
கன்டோன்வாட்
மாவட்டம்லோசான் மாவட்டம்
46°31.19′N 6°38.01′E
மக்கட்தொகை1,33,364
  - அடர்த்தி3,224 /km² (8,349 /sq.mi.)
பரப்பளவு41.37 ச.கி.மீ (16 ச.மை)
ஏற்றம்495 மீ (1,624 அடி)
  - Highest929.4 m - ஜோரட்
  - Lowest372 m - ஜெனிவா ஏரி
லோசானின் வான்வழி காட்சி
லோசானின் வான்வழி காட்சி
அஞ்சல் குறியீடு1000-1018
SFOS number5586
' தானியல் பிரெலாசு (as of 2008) சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சி
மக்கள்லெ லோசானுவா (Les Lausannois)
சூழவுள்ள மாநகராட்சிகள்
(view map)
இணையத்தளம்www.lausanne.ch
Profile
லோசான்

2009 இறுதியில் மக்கள்தொகை 125,885ஆக இருந்தது. நாட்டின் நான்காவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது'[2]. விளையாட்டு பிணக்குத் தீர்வாணையத்தின் தலைமையகமும் இங்குதான் உள்ளது. இந்நகரைச் சுற்றிலும் திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. லோசான் நகரத் தொடர்வண்டி அமைப்பில் 28 நிலையங்கள் உள்ளன. உலகில் விரைவுப் போக்குவரத்து நகர்த் தொடர்வண்டி அமைந்துள்ள மிகச்சிறிய நகராக விளங்குகிறது.

மேற்கோள்கள்

  1. Clarey, Christopher. "Introduction to Lausanne". த நியூயார்க் டைம்ஸ். http://travel.nytimes.com/travel/guides/europe/switzerland/lausanne/overview.html?st=cse&sq=Lausanne&scp=3. பார்த்த நாள்: 2008-04-20.
  2. "Welcome to International Sports Federations". International Sports Federations. பார்த்த நாள் 2009-09-27.

வெளி யிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.