லில் வெய்ன்

லில் வெய்ன் (Lil' Wayne) என்று அழைக்கப்பட்ட டிவெய்ன் மைக்கல் கார்டர் ஜூனியர் (Dwayne Michael Carter, Jr., பி. செப்டம்பர் 27, 1982) நியூ ஓர்லென்ஸ், லூசியானாவில் பிறந்து வளந்த அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது கேஷ் மணி ரெக்கர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஹாட் பாய்ஸ் ராப் இசைக் குழுமத்தில் இருந்து புகழுக்கு வந்தார்.

Lil Wayne
லில் வெய்ன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டிவெய்ன் மைக்கல் கார்டர், ஜூனியர்
பிறப்புசெப்டம்பர் 27, 1982 (1982-09-27)[1]
பிறப்பிடம்நியூ ஓர்லென்ஸ், லூசியானா
இசை வடிவங்கள்ராப் இசை
இசைத்துறையில்1994–இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்கேஷ் மணி ரெக்கர்ட்ஸ்/யங் மனி/ யூனிவர்சல் ரெக்கர்ட்ஸ்
இணைந்த செயற்பாடுகள்பர்ட்மேன், ஹாட் பாய்ஸ், ஜுவெல்ஸ் சான்ட்டானா, மேனி ஃபிரெஷ், பி.ஜி., ஜூவெனைல், டி-பெய்ன், கான்யே வெஸ்ட்
இணையதளம்லில் வெய்ன்-ஒன்லைன்

1999இல் இவரின் முதலாம் இசைத்தொகுப்பு, த ப்ளாக் இஸ் ஹாட் வெளிவந்து ராப் இசை உலகில் செல்வாக்கு பெற்ற த சோர்ஸ் இதழால் சிறந்த புதிய ராப் இசைக் கலைஞர் என்று பரிந்துரைக்கப்பட்டார். இதற்கு பிறகு வேறு ராப்பர்களின் பாடல்களில் இவரும் பாடியுள்ளார்.

2004இல் இவரின் த கார்டர் இசைத்தொகுப்பு வெளிவந்தது. இதுவும் இதற்கு பிறகு தொடர்ந்த த கார்டர் 2 மற்றும் த கார்டர் 3 இசைத்தொகுப்புகள் காரணமாக இவர் மேலும் புகழுக்கு வந்தார்.

2008இல் புகழ்பெற்ற ஆர்&பி இசைப் பாடகர் டி-பெய்ன் உடன் சேர்ந்து இசைத்தொகுப்பு வெளிவரும் என்று கூறியுள்ளார்.

இசைத்தொகுப்புகள்

  • 1999: த ப்ளாக் இஸ் ஹாட்
  • 2000: லைட்ஸ் அவுட்
  • 2002: 500 டிகிரீஸ்
  • 2004: த கார்டர்
  • 2005: த கார்டர் II
  • 2008: த கார்டர் III
  • 2010: ரீ பேர்த்
  • 2011: த கார்டர் IV

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.