லக்லான் மக்குவாரி

மேஜர் ஜெனரல் லக்லான் மக்குவாரி (Lachlan Macquarie, ஜனவரி 31, 1762ஜூலை 1, 1824), பிரித்தானிய இராணுவ வீரரும், காலனித்துவ நிர்வாகியும் ஆவார். இவர் 1810 முதல் 1921 வரை நியூ சவுத் வேல்ஸ் என்ற பிரித்தானிய முடியாட்சிக் காலனியின் ஆளுநராக இருந்தார். அந்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கட்டிடக்கலைக்கு இவர் பெரும் பங்காற்றியவர். ஆஸ்திரேலிய சமுதாயத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் குற்றவாளிகளின் குடியேற்றத்திட்டத்தை ஒரு முழுமையான விடுதலையடைந்த குடியேற்ற நாடாக ஆக்கியதில் இவரது பங்களிப்பு முக்கியமானதாக சரித்திரவியலாளர்கள் கருதுகிறார்கள்.

லக்லான் மக்குவாரி
Lachlan Macquarie
நியூ சவுத் வேல்சின் 5வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 1, 1810  நவம்பர் 30, 1821
முன்னவர் வில்லியம் பிளை
பின்வந்தவர் தொமஸ் பிரிஸ்பேன்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜனவரி 31, 1762
ஸ்கொட்லாந்து
இறப்பு ஜூலை 1, 1824
லண்டன், இங்கிலாந்து
வாழ்க்கை துணைவர்(கள்) ஜேன் ஜார்விஸ் (1793-1796), எலிசபெத் காம்பெல் (1807 - 1824)

ஸ்கொட்லாந்தின் ஊல்வா தீவில் பிறந்த லக்லான் தனது 14வது அகவையில் அத்தீவை விட்டுப் புறப்பட்டார்[1]. எடின்பரோ ரோயல் உயர் பாடசாலையில் கல்வி கற்றார்.

1776 இல் கடற்படையில் இணைந்து வட அமெரிக்கா, இந்தியா, எகிப்து ஆகிய இடங்களில் பணியாற்றினார். பம்பாயில் ஜனவரி 1793 ஆம் ஆண்டில் விடுதலைக் கட்டுநர் ஆனார்[2]. 1789 இல் கப்டனாகவும், 1801 இல் மேஜராகவும், 1805 இல் லெப். கேணல் ஆகவும் பணி உயர்வு பெற்றார்.

ஏப்ரல் 1809 இல் நியூ சவுத் வேல்சின் ஆளுநராக நிமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. Keay, J. & Keay, J. (1994) Collins Encyclopaedia of Scotland. London. HarperCollins.
  2. Freemasonry Australia, Available: www.freemasonrysaust.org.au/historyearly.html, அணுகப்பட்டது 2007, ஏப்ரல் 26

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.