ரெய்க்ஸ்டாக் கட்டடம்

ரெய்க்ஸ்டாக் கட்டடம் (Reichstag building, German: Reichstagsgebäude; உத்தியோகபூர்வமாக: Plenarbereich Reichstagsgebäude) என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் ரெய்க்ஸ்டாக் என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும். இது 1894 இல் திறக்கப்பட்டு[1] 1933 தீயினால் பாரதூரமாக சேதமாகும் வரை நாடாளுடன்றமாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின் இக்கட்டடம் பாவனைக்கு இல்லாதுபோனது. மேற்கு, கிழக்கு செருமனிகளின் நாடாளுடன்றங்கள் வெவ்வேறு இடங்களின் இயங்கின.

ரெய்க்ஸ்டாக்
ரெய்க்ஸ்டாக் கட்டடம். அர்ப்பணிப்பு Dem deutschen Volke, அர்த்தம் செருமனிய மக்களுக்கு, இதனை கட்டடத்தின் மேலுள்ள பட்டையில் காணலாம்.
Location within Berlin
பொதுவான தகவல்கள்
நகர்பேர்லின்
நாடுசெருமனி
ஆள்கூற்று52.518614°N 13.375162°E / 52.518614; 13.375162
கட்டுமான ஆரம்பம்9 சூன் 1884
நிறைவுற்றது1894
புதுப்பித்தல்1961-64, 1992
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்போல் வோலட்
வடிவமைப்புக் குழு
கட்டிடக்கலைஞர்நோர்மன் போஸ்டர்

1960 இல் அழிவுற்றிருந்த கட்டடம் பகுதியாக புதுப்பிக்கப்பட்டது. ஆயினும், 3 ஒக்டோபர் 1990 இல் செருமானிய மீளிணைவு வரை முழுமையான புதுப்பித்தல் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின் ஆரம்பிக்கப்பட்ட முழுமையான புதுப்பித்தல் 1999 இல் நிறைவுற்று, செருமானிய நாடாளுடன்ற கூடுமிடமாக மாறியது.

உசாத்துணை

  1. "Reichstag". பார்த்த நாள் 10 நவம்பர் 2016.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.