ரூகொல்லா கொமெய்னி

ஆயதுல்லா ரூகொல்லா மூசவி கொமெய்னி (Sayyid Ruhollah Mūsavi Khomeini, பாரசீகம்: سید روح‌الله موسوی خمینی, 24 செப்டம்பர் 1902 – 3 சூன் 1989) ஓர் ஈரானிய அறிஞரும், இசீயா முசுலிம் மதத் தலைவரும், மெய்யியலாளரும், புரட்சியாளரும், அரசியல்வாதியும், ஈரான் இசுலாமியக் குடியரசின் நிறுவனரும் ஆவார். 1979இல் இவரால் துவங்கப்பட்ட ஈரானியப் புரட்சியை அடுத்து 2500-ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரசீகப் பேரரசு முடிவுக்கு வந்து ஈரானின் கடைசி அரசர் (ஷா) முகம்மத் ரிசா ஷா பஹ்லவி பதவி இழந்தார். புரட்சிக்கு பிறகு இறப்பு வரை இவர் ஈரானின் ஆன்மீக உச்சத் தலைவராக இருந்தார்.

மகா ஆயதுல்லா
ரூகொல்லா மூசவி கொமெய்னி
1வது ஈரானிய உச்சத் தலைவர்
பதவியில்
3 திசம்பர் 1979  3 சூன் 1989
முன்னவர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி
பின்வந்தவர் அலி கொமெய்னி
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 24, 1902(1902-09-24)

[1][2][3][4][5]
கொமெயின், ஈரான்

இறப்பு 3 சூன் 1989(1989-06-03) (அகவை 86)
தெகுரான், ஈரான்
தேசியம் ஈரானியர்
அரசியல் கட்சி இசுலாமியக் குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கதிஜா சக்கஃபி (தி. 19291989) «start: (1929)end+1: (1990)»"Marriage: கதிஜா சக்கஃபி to ரூகொல்லா கொமெய்னி" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF)
பிள்ளைகள் முசுத்தபா
சாரா
சாதிக்
பரீதா
அகமது
சமயம் சியா இசுலாம் (பன்னிருவர், சியா இசுலாம்)[6][7][8]
கையொப்பம்
இணையம் www.imam-khomeini.ir

1979 டைம் ஆண்டு நபராக அமெரிக்க டைம் செய்தி இதழால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்,[9] இசுலாமின் மீட்கைக்கு வழிகோலியதாக சியா மற்றும் சுன்னி மக்களால் ஒருசேர[10] மிகவும் விரும்பப்பட்ட கவர்ச்சி வாய்ந்த தலைவர் எனக் கருதப்பட்டார்.[11].

இளமைப் பருவம்

இவர் 1903 -ல் தனது தந்தையாரின் மறைவிற்குப் பின் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார். தனது 6 வது வயதில் பாரசீக மொழியில் குரானைக் கற்க ஆரம்பித்தார். பின்னர் பள்ளியில் மதக்கல்வி பயின்றார். தனது இளமைப் பருவத்தில் பெரும்பாலும் மதக்கல்வி கற்றார். இஸ்லாமிய சட்டக்கல்வியைக் கற்றறிந்தார். கவிதையிலும், தத்துவத்திலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அவரது ஆசிரியர் 'மிர்ஸா முகம்மது அலி ஸஹஹபாடியின் தாக்கம் அவரிடம் இருந்தது. கொமேனி கிரேக்கத் தத்துவத்தைக் கற்றார். அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. 'அவிஸென்னா 'மற்றும் 'முல்லா ஸாட்ரா' ஆகிய இஸ்லாமிய தத்துவ ஞானிகளின் கருத்துகளே கொமேனியை அதிகளவு கவர்ந்தன.

மேற்கோள்கள்

  1. DeFronzo 2007, p. 287. "born 22 September 1901..."
  2. "History Of Iran Ayatollah Khomeini – Iran Chamber Society". Iranchamber.com. பார்த்த நாள் 5 January 2013.
  3. "Khomeini Life of the Ayatollah By BAQER MOIN". The New York Times. https://www.nytimes.com/books/first/m/moin-khomeini.html. பார்த்த நாள்: 19 January 2012.
  4. "Imam Khomeini Official Website | پرتال امام خمینی". harammotahar.ir. பார்த்த நாள் 9 March 2012.
  5. Karsh 2007, p. 220. "Born on 22 September 1901
  6. Bowering, Gerhard; Crone, Patricia; Kadi, Wadad ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (28 November 2012). The Princeton Encyclopedia of Islamic Political Thought. Princeton University Press. பக். 518. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781400838554.
  7. Malise Ruthven (8 April 2004). Fundamentalism: The Search For Meaning: The Search For Meaning (reprint ). Oxford University Press. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780191517389.
  8. Jebnoun, Noureddine; Kia, Mehrdad; Kirk, Mimi, தொகுப்பாசிரியர்கள் (31 July 2013). Modern Middle East Authoritarianism: Roots, Ramifications, and Crisis. Routledge. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781135007317.
  9. TIME. "TIME Person of the Year 1979: Ayatullah Khomeini." 7 January 1980. Accessed 22 November 2008 at http://www.time.com/time/subscriber/personoftheyear/archive/stories/1979.html
  10. Arjomand, S.A. "Khumayni." Encyclopaedia of Islam, Second Edition. Brill, 2008.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.