ரியாசி மாவட்டம்

ரியாசி மாவட்டம் (Reasi district), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடம் ரியாசி நகரம் ஆகும். இம்மாவட்டம் ஜம்மு பகுதியில் உள்ள பத்து மாவட்டங்களில் ஒன்றாகும்.

ரியாசி மாவட்டம்
மாவட்டம்
வைஷ்ணவ தேவி கோயிலின் நுழைவாயில்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரியாசி மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
நிறுவியதுஏப்ரல் 2007
மாவட்டத் தலைமையிடம்ரியாசி
பரப்பளவு
  மொத்தம்1,719
மக்கள்தொகை (2011)[1]
  மொத்தம்3,14,667
  அடர்த்தி180
இனங்கள்Languages
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்http://reasi.gov.in/

எல்லைகள்

1,719 சதுர கிலோ மீட்டர் கொண்ட ரியாசி மாவட்டத்தின் கிழக்கில் உதம்பூர் மாவட்டம் மற்றும் இராம்பன் மாவட்டம், தெற்கில் ஜம்மு மாவட்டம், மேற்கில் ரஜௌரி மாவட்டம், வடக்கில் குல்காம் மாவட்டம் எல்லைகளாக கொண்டது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ரியாசி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 314,667 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 166,461 ஆகவும், பெண்கள் 148,206 ஆகவும் உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி 27.04% உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 183 ஆக உள்ளது. சராசரி எழுத்தறிவு 58.15% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 68.38% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 46.59% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 890 வீதம் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 55,799 ஆக உள்ளது.[2]

சமயம்

ரியாசி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 153,898 (48.91 %) ஆகவும், இசுலாமியர்கள் 156,275 (49.66 %), சீக்கியர்கள் 3,107 (0.99 %) மற்றவர்கள் 0.38% ஆகவும் உள்ளனர்.

போக்குவரத்து

தற்போது மாநில சாலைகள், ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளை ரியாசி மாவட்டம் இணைக்கிறது.

தொடருந்து திட்டம்

ஜம்மு - ஸ்ரீநகர் - பாரமுல்லாவை இணைக்கும் காஷ்மீர் தொடருந்து திட்டம், ரியாசி மாவட்டம் வழியாக செல்லும் வகையில் 4 சூலை 2014இல் தொடங்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம்

ரியாசி மாவட்டம் 230 மற்றும் 60 வருவாய் கிராமங்களை கொண்ட ரியாசி மற்றும் கூல்-குலாப்கர் என வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது.

இம்மாவட்டம் அர்னாஸ், மகாஹோர், ரியாசி மற்றும் பௌனி என நான்கு ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.[3] [[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|ஊராட்சி ஒன்றியங்கள் பல ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.

அரசியல்

ரியாசி மாவட்டம் ரியாசி, குலாகர் மற்றும் கூல்-அர்னாஸ் என மூன்று சட்டமன்ற தொகுதிகளை உடையது.[4]

பார்க்க வேண்டிய இடங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.