ரிச்டெரைட்டு

ரிச்டெரைட்டு (Richterite) என்பது Na(NaCa)Mg5Si8O22(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் சோடியம் கால்சியம் மக்னீசியம் சிலிக்கேட்டு கனிமமாகவும் ஆம்பிபோல் குழுவைச் சேர்ந்த கனிமமாகவும் இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. இக்கனிமத்தின் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மக்னீசியத்திற்கு பதிலாக இரும்பு இடமிடித்தால் அதை பெரோரிச்டெரைட்டு என்கிறோம். ஐதராக்சில் குழுவுக்குப் பதிலாக புளோரின் இடம்பெற்றால் அதை புளோரோரிச்டெரைட்டு என்கிறோம்.ரிச்டெரைட்டு படிகங்கள் நீண்டும் பட்டகத்தன்மையும் கொண்டவையாக அல்லது பட்டகத்தன்மையும் இழைத்தொகுதியாகவும் அல்லது பாறைகளுடன் சேர்ந்தவாறு உள்ளன. பழுப்பு, சாம்பல் பழுப்பு, மஞ்சள் பழுப்பு, இளம் சிவப்பு, வெளிறிய முதல் அடர் பச்சை நிறங்களில் ரிச்டெரைட்டு கனிமம் காணப்படுகிறது. பல்லுருவத் தோற்ற மண்டலங்களில் வெப்பவியல் பல்லுருவ சுண்ணாம்புக்கற்களாக ரிச்டெரைட்டு தோன்றுகிறது. மக்னீசியம் மிகுந்த தாது படிவுகளில் அடர் நிற அக்கினிப் பாறைகளில் நீர்வெப்ப விளைபொருளாகவும் ரிச்டெரைட்டு தோன்றுகிறது. கனடா நாட்டின் கியூபெக்கிலுள்ள மோன்ட்-செயிண்ட்-இலாயிர், வில்பெர்போர்சு, ஒண்டாரியோவின் டோரி இல், சுவீடனின் லேங்பேன், பாய்சுபெர்க்கு, மேற்கு ஆத்திரேலியாவில் மேற்கு கிம்பர்லி, மியான்மரின் சங்கா, அமெரிக்காவின் கொலராடோவின் அயர்ன் இல், இலியூசைட்டு இல்சு,வையோமிங்கு மற்றும் மோன்டானாவின் லிப்பி நகரம் போன்ற இடங்களில் ரிச்டெரைட்டு கிடைக்கிறது. 1865 ஆம் ஆண்டில் செருமனி நாட்டு கனிமவியலாளர் ஐயரோனிமசு தியோடர் ரிச்டெர் (1824-1898) பெயர் இக்கனிமத்திற்கு பெயராக சூட்டப்பட்டது.

ரிச்டெரைட்டு
Richterite
கனடாவில் கிடைத்த ரிச்டெரைட்டு கனிமம்.
பொதுவானாவை
வகைஇனோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடுNa(NaCa)Mg5Si8O22(OH)2
இனங்காணல்
நிறம்பழுப்பு, மஞ்சள்,சிவப்பு அல்லது பச்சை
படிக இயல்புபட்டகத்தன்மை ஊசிகள் அல்லது கல்நார் தோற்றம்
படிக அமைப்புஒற்றைச்சாய்வு
இரட்டைப் படிகமுறல்எளியது அல்லது பல்லிணை {100}
பிளப்புசரிபிளவு
முறிவுசம்மற்றது, நொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5-6
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெளிர் மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் கசியும்
ஒப்படர்த்தி3.0-3.5
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.615 nβ = 1.629 nγ = 1.636
இரட்டை ஒளிவிலகல்δ = 0.021
பலதிசை வண்ணப்படிகமைவலியது: வெளிர் மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு
2V கோணம்68° அளக்கப்பட்டது
மேற்கோள்கள்[1][2][3][4]


மேற்கோள்கள்

  • Bonewitz, 2008, Smithsonian Rock and Gem
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.