ரிசிகேசு
ஹிரிஷிகேஷ் என்றும் உச்சரிக்கப்படும் ரிஷிகேஷ் இந்தி: ऋषिकेश இந்திய மாநிலமான உத்தர்கண்டில் உள்ள டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமும் நகராட்சி சபையும் ஆகும். இது இந்துக்களின் புனிதமான நகரம் என்பதுடன் பிரபலமான யாத்திரை மையமாகவும் இருக்கிறது.
Rishikesh | |
— city — | |
![]() | |
![]() ![]() Rishikesh
, Uttarakhand | |
அமைவிடம் | 30°07′N 78°19′E |
நாடு | ![]() |
மாநிலம் | Uttarakhand |
மாவட்டம் | Dehradun |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்களவைத் தொகுதி | Rishikesh |
மக்கள் தொகை | 59,671 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 532 மீட்டர்கள் (1,745 ft) |
இது இமாலய மலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாகவும் இருக்கிறது, மற்றொரு புனித நகரமான ஹரித்துவாருக்கு ஏறத்தாழ 25 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி ஆகியவற்றை உள்ளிட்ட சார் தாம் யாத்திரை செல்வதற்கான துவக்கப் புள்ளியாக ரிஷிகேஷ் இருக்கிறது.
வரலாறு
"Hṛṣīkeśa" (சமக்கிருதம்: हृषीकेश) என்பது 'புலன்களின் கடவுள்' என்ற பொருள் கொண்ட விஷ்ணுவின் பெயராகும்.[1][2] ரிஷிகேஷ் என்பது வட இந்தியாவில் இமாலய மலைத்தொடர் வரிசையில் அமைந்திருக்கும் இந்துக்களின் புனித நகரமாகும். 'ரப்யா ரிஷியின்'[3] தவத்தின் (சுய-புலனடக்கம்) காரணமாக விஷ்ணுவானவர் கடவுள் ரிஷிகேஷாக அவருக்கு தோன்றியதன் நினைவாக இந்த இடம் அந்தப் பெயரைப் பெற்றிருக்கிறது[4]. ஸ்கந்த புராணத்தில், கடவுள் விஷ்ணு ஒரு மாமரத்தின் கீழே தோன்றியதால் இந்தப் பகுதி 'குப்ஜம்ராக்' என்று அறியப்படுகிறது[2].
வரலாற்று ரீதியாக, ரிஷிகேஷ் சிவனின் உறைவிடமான புராண ரீதியான 'கேதர்கண்ட்'டின் (இப்போது கர்வால்) ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது[5]. இலங்கையின் அரசனான ராவணனைக் கொன்றதற்காக கடவுள் ராமன் இங்கு பிராயச்சித்தம் செய்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகிறது; அவருடைய இளைய சகோதரனான லட்சுமணன் இதே இடத்தில்தான் கங்கையைக் கடந்தார். இந்த இடத்தில்தான் இப்போது கயிற்றைப் பயன்படுத்திச் செல்லக்கூடிய 'லக்ஷ்மன் ஜூலா' (लक्ष्मण झूला) பாலம் உள்ளது. ஸ்கந்த புராணத்தில் வரும் 'கேதர் கந்த்' என்பதும் இதே இடத்தில் இந்திரகுந்த் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இந்த கயிற்றுப் பாலம் 1889ஆம் ஆண்டில் அதிர்வுதாங்கும் பாலமாக இரும்புக் கம்பிகள் கொண்டு மாற்றப்பட்டது. 1924ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, இது வலுவான தற்போதைய பாலமாக மாற்றப்பட்டது. இந்த இடத்தைப் பற்றிய சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. கடவுள் ராமர் இந்த இடத்தில்தான் தன்னுடைய தியானம் மற்றும் பிற ஆன்மீகச் சடங்குகளைச் செய்தார் என்பதுடன் கங்கையில் ஓடும் தண்ணீர் அவரைத் தொந்தரவு செய்ய லக்ஷ்மன் ஒரு அம்பை எய்து தண்ணீரின் ஓட்டத்தை நிறுத்தினார். அதிலிருந்து இங்கிருக்கும் இந்த நதி ஆச்சரியப்படும்படியாக அமைதியாகவே உள்ளது; இரவில்கூட உங்களுக்குக் கீழே ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியாமலேயே நீங்கள் பாலத்தை கடந்துசெல்லாம். இன்றும் இந்தப் பாலத்தின் மேற்குக் கரையில் லக்ஷ்மணர் கோயில் உள்ளது, அத்துடன் அதற்கும் அப்பால் கடவுள் ராமருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது. இதனுடன் அவருடைய மற்ற சகோதரரான, 'கேதர் கண்ட்' டில் குறிப்பிடப்படுகின்ற பரதனுக்கும் ஒரு கோயில் இருக்கிறது[6]. ராம்ஜுலா - கங்கைக்கு மேலே உள்ள இந்தப் பாலம் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இது வரலாற்றுப் பூர்வமானதோ அல்லது எந்தப் புராணங்களுக்கும் சொந்தமானதோ அல்லது மற்ற மத நூல்கள் குறிப்பிடுவதோ இல்லை. இது தொடங்கிவைக்கப்பட்ட காலத்தில் சிவானந்த பாலம் என்பதே இதன் அதிகாரப்பூர்வப் பெயராக இருந்தது.


புனித நதியான கங்கை ரிஷிகேஷின் வழியாகப் பாய்கிறது. உண்மையில், இங்கிருந்துதான் இமாலயத்தில் உள்ள ஷிவாலிக் மலைத்தொடருக்கு இந்த நதி செல்கிறது என்பதுடன் வட இந்திய சமவெளிகளுக்கும் பாய்ந்தோடுகிறது. பழமையான மற்றும் புதிய சில கோயில்கள் ரிஷிகேஷில் உள்ள கங்கை ஆற்றின் கரைகளில் காணப்படுகின்றன. இந்த நகரம் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் இந்தியாவிலிருந்தும் உலகின் மற்ற நாடுகளிலிருந்தும் கவர்கிறது. சில நேரங்களில் "யோகாவின் உலகத் தலைநகரம்" என்று அழைக்கப்படும் ரிஷிகேஷ் சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்ற நிறைய யோகா மையங்களைக் கொண்டிருக்கிறது. ரிஷிகேஷில் அதன் வழியாக ஓடும் புனித ஆற்றின் முனையில் உட்கார்ந்து தியானம் செய்வது மோட்சத்தை அடைவதற்கான வழிகளுள் ஒன்று என நம்பப்படுகிறது. இந்தியாவிலிருந்தும் வெளியிலிருந்தும், கங்கை ஆற்றின் ஓட்டத்தில் வேகமாகவும் மிதமாகவும் செல்லக்கூடிய பயணத்தை அளிக்கின்ற இதனுடைய வெள்ளைத் தண்ணீர் படகுப் பயணத்திற்காகவும் இது பிரபலமானதாக இருக்கிறது.

ரிஷிகேஷ் என்றப் பெயர் இந்த நகரத்தோடு மட்டுமல்லாது கங்கை ஆற்றின் இரண்டு பக்கங்களில் உள்ள குக்கிராமங்கள் மற்றும் குடியேற்றப் பகுதிகளையும் உள்ளிட்ட ஐந்து தனித்தனிப் பிரிவுகளுக்கும் சேர்த்தே பயன்படுத்தப்படுகிறது. இது வணிக மற்றும் தகவல்தொடர்பு மையமான ரிஷிகேஷூடன் நீண்ட பெரிய புறநகரமான முனி-கி-ரேதி அல்லது "யோகிகளின் மண்", சிவானந்த ஆசிரமத்தின் வீடான சிவானந்த நகர் மற்றும் ரிஷிகேஷிற்கு வடக்கே சுவாமி சிவானந்தாவால் நிறுவப்பட்ட டிவைன் லைஃப் சொசைட்டி, அதற்கும் வடக்கே லக்ஷ்மண் ஜூலாவின் கோயில் பகுதி மற்றும் வடக்குக் கரையில் சுவர்க் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள ஆசிரமங்கள் ஆகிய பகுதிகளையும் உள்ளிட்டிருக்கிறது. ஒருவர் இங்கிருந்து புகழ்பெற்ற நீலகண்ட மஹா தேவா கோயிலை அடைந்துவிட முடியும். திரிவேணி காட்டில் அந்திப்பொழுதில் நிகழ்த்தப்படும் கங்கா ஆரத்தி வருகையாளர்களிடையே மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. ரிஷிகேஷிற்கு 12 கிலோமீட்டர்கள் தொலைவில் காட்டிற்கு நடுவில் அமைந்திருக்கும் 'நீலகண்ட தேவா கோயில்' கங்கை ஆற்றின் இந்த நகரத்திலிருந்து 21 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள 'வசிஷ்தா குஹா'வைச் (யோகி வசிஷ்தாவின் குகை) சுற்றி இருக்கிறது[4][7].
பாரம்பரிய வேதாந்த ஆய்வுகளை பாதுகாக்கவும் மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனமான, 120 வருட பழமைவாய்ந்த கைலாஷ் ஆஷ்ரம பிரம்மவித்யாபீடத்தின் வீடாகவும் ரிஷிகேஷ் இருக்கிறது. சுவாமி விவேகானந்தர், சுவாமி ராம தீர்த்தா மற்றும் சுவாமி சிவானந்தா போன்ற முக்கியமான ஆளுமைகள் இந்த நிறுவனத்தில் படித்திருக்கின்றனர்.
1968ஆம் ஆண்டில் தி பீட்டில்ஸ் இசைக்குழு ரிஷிகேஷில் இருக்கும் தற்போது மூடப்பட்டுவிட்ட மகரிஷி மகேஷ் யோகியின் ஆசிரமத்திற்கு வருகை புரிந்திருக்கிறது[8], ஜான் லெனான் 'தி ஹேப்பி ரிஷிகேஷ் சாங்' என்ற தலைப்பிலான பாடலையும் பதிவு செய்திருக்கிறார்.[9][10] தி பீட்டில்ஸ் இசைக்குழு மகரிஷி ஆசிரமத்தில் அவர்கள் இருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 48 பாடல்களைப் பதிவுசெய்திருக்கிறது. இவற்றில் பலவும் ஒயிட் ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கின்றன. தி பீச் பாய்ஸைச் சேர்ந்த மைக் லவ் மற்றும் டெனோவன் மற்றும் கிப் மில்ஸ் போன்ற வேறு சில கலைஞர்களும் சிந்திக்கவும், தியானம் செய்யவும் இந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். மிகச் சமீபத்தில் இந்த இடம் ஹாலிவுட் நட்சத்திரம் கேட் வின்ஸ்லட் உள்ளிட்ட பிரபலங்களின் அக்கறைக்குரிய இடமாக இருந்து வருகிறது. கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் 80 கிலோமீட்டர்கள் உயரத்தில்தான் டெஹ்ரி அணை அமைந்துள்ளது.
புவியமைப்பு
30.12°N 78.32°E.[11] இல் ரிஷிகேஷ் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 532 மீட்டர்களாகும் (1,745 அடிகள்).
மக்கள்தொகை விகிதம்
As of 2001ஆம் ஆண்டின் இந்திய கணக்கெடுப்பின்படி[12], ரிஷிகேஷின் மக்கள்தொகை 59,671 ஆகும். மக்கள் தொகையில் 54% ஆண்களும், 44% பெண்களும் ஆவர். ரிஷிகேஷில் சராசரி எழுத்தறிவு விகிதம் 75%, இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகம்: ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 80%, பெண்கள் எழுத்தறிவு விகிதம் 68%. ரிஷிகேஷில் உள்ள மக்கள்தொகையினரில் 12 சதவிகிதத்தினர் 6 வயதிற்கும் குறைந்தவர்களாவர்.
சாகச விளையாட்டுக்கள்
இந்த நகரம் இந்தியாவின் சாகசத் தலைநகரமாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து வரும் பயணிகள் புனித கங்கையில் வெள்ளைத் தண்ணீர் படகுப் பயணத்தை அனுபவிக்க வருகின்றனர் என்பதோடு கயாக்கிங், பாடி சர்ஃபிங், இன்ன பிற விளையாட்டுக்களையும் அனுபவிக்கின்றனர்.[13]
மேலும் பார்க்க
- வீரபத்ரா
பார்வைக் குறிப்புக்கள்
- மோனிர்-வில்லியம்ஸ்: "புலன்களின் கடவுள்".
- ரிஷிகேஷ் வரலாறு
- இந்துமதத்தில் பயன்படுத்தப்படும் சொற்பதங்கள்#ஆர்
- ரிஷிகேஷ் அதிகாரப்பூர்வ வலைத்தளம் டெஹ்ராடூன் மாவட்டம்.
- மாவட்ட சுயவிவரம் உத்தர்கண்ட் அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்.
- ஹிரிஷிகேஷ் www.mapsofindia.com.
- நீல்கண்ட்
- ரிஷிகேஷிற்கு பீட்டில்ஸ் வந்ததற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட தளம் ரிஷிகேஷில் பீட்டில்ஸ், பால் சல்ஸ்த்மேன், 2000, பெங்குயின் ஸ்டுடியோ புக்ஸ். ISBN 0-553-09673-7.
- தி ஹேப்பி ரிஷிகேஷ் சாங் - பீட்டில்ஸ்
- தி ஹேப்பி ரிஷிகேஷ் சாங்
- ஃபாலிங் ரெய்ன் ஜெனோமிக்ஸ், இன்க் - ரிஷிகேஷ்
- "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
- http://wildex.in/rishikesh_river_rafting.htm
வெளிப்புற இணைப்புகள்
- டேஹ்ராடூன் மாவட்டத்திலுள்ள ரிஷிகேஷ் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- ரிஷிகேஷ் வழிகாட்டி
- ஆயுர்வேத பஞ்சகர்மா, ரெய்கி மற்றும் பல்வேறு பயிற்சிகள் அரசு அங்கீகரித்த மையத்தில்
- யோகா ஆசிரியப் பயிற்சி மற்றும் குண்டலினி/தாந்த்ரா யோகா ரிஷிகேஷ்
- வனமாலி ஆசிரமம்
- டெல்லியிலிருந்து ரிஷிகேஷ்-ஷிவ்புரி-தேவ்பிரயாக்
- ராம் ஜூலா புகைப்படம்
- இமாலய நெசவாளர்கள் நன்கு விற்பனையாகும் கழுத்துச் சுற்றாடை, சால்வைகள் மற்றும் பெண்கள் கழுத்துச் சுற்றாடை ஆகியவற்றை இயற்கையான சாயம் மற்றும் கம்பளி, எரி பட்டு மற்றும் பாஷினாவைப் பயன்படுத்தி தயாரிக்கின்றனர்.
- ரிஷிகேஷில் சாகசப் பயணம்
- ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014