ராய்காஞ்ச்

ராய்காஞ்ச் (Raiganj) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் உத்தர தினஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைநகராகவும் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தின் உபபிரிவாகவும் (subdivision) உள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாமான ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் இந்நகரில் அமைந்துள்ளது.[1]

ராய்காஞ்ச்
நகர்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்உத்தர தினஜ்பூர் மாவட்டம்
ஏற்றம்40
மக்கள்தொகை (2011)
  மொத்தம்1,99,758
Languages
  Officialவங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
இணையதளம்uttardinajpur.nic.in

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,99,758 ஆகும். இதில் ஆண்கள் 1,04,966 பேரும் பெண்கள் 94,792 பேரும் ஆகும். 20,028 பேர் 6 வயதிற்கும் குறைவானவர்கள் ஆவார். இந்நகரின் கல்வியறிவு 81.71% ஆகும்.[2]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. http://www.hoparoundindia.com/west-bengal/raiganj-attractions/raiganj-wildlife-sanctuary.aspx
  2. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. பார்த்த நாள் 2011-10-21.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.