ராமச்சந்திர பாபு

ராமச்சந்திர பாபு, கேரள மாநில விருதுபெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் அதிகமாக மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தாலும் தமிழ், இந்தி, அரபி, ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் பங்காற்றியுள்ளார்.

கே. ராமச்சந்திர பாபு
பிறப்புதிசம்பர் 15, 1947 (1947-12-15)
மதுராந்தகம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்
பணிஒளிப்பதிவாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1971—நடப்பு
பட்டம்ISC
வாழ்க்கைத்
துணை
கே. லத்திகா ராணி
பிள்ளைகள்அபிஷேக் ஆர். பாபு
அபிலேஷ் ஆர். பாபு
விருதுகள்சிறந்த ஒளிப்பதிவாளருக்கான கேரள மாநில விருது 1976 - த்வீப்
1978 - ரதிநிர்வேதம்
1980 - சாமரம்
1989 - ஒரு வடக்கன் வீரகதா
வலைத்தளம்
www.ramachandrababu.com

இளம்பருவம்

ராமச்சந்திர பாபு தமிழ்நாட்டின் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் பிறந்தவர். சென்னையின் லயோலா கல்லூரியில் வேதியியல் படித்து இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் புனேயில் உள்ள இந்தியத் திரைத்துறை நிறுவனத்தில் சேர்ந்து திரைத்துறையில் இளநிலை பட்டம் பெற்றார்.

திரைத்துறை

வித்யார்த்திகளிலே இதே இதே என்னும் திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவரது முதல் வண்ணப்படமான த்வீப் இவருக்கு கேரள மாநில விருதைப் பெற்றுத் தந்தது. ரதிநிர்வேதம், சாமரம், ஒரு வடக்கன் வீரகதா ஆகிய திரைப்படங்களுக்கும் மாநில விருது பெற்றார். பகல் நிலவு உட்பட சில தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய திரைப்படங்களில் சில:

  1. வித்யார்த்திகளிலே இதே இதே -மலையாளம்
  2. ரேகிங் -மலையாளம்
  3. மனசு -மலையாளம்
  4. நிர்மால்யம் -மலையாளம்
  5. அக்னிபுஷ்பம் -மலையாளம்
  6. சிரிஷ்டி -மலையாளம்
  7. ஸ்வப்னதனம் -மலையாளம்
  8. அம்மே அனுபமே -மலையாளம்
  9. வீடு ஒரு சொர்க்கம் -மலையாளம்
  10. சினேகா யமுனா -மலையாளம்
  11. அக்ரகாரத்தில் கழுதை -தமிழ்
  12. ஓணப்புடவா -மலையாளம்
  13. உதயம் கிழக்குதானே -மலையாளம்
  14. அலாவுதீனும் அற்புதவிளக்கும் -தமிழ்
  15. ஒரே வானம் ஒரே பூமி -தமிழ்

படத்தொகுப்பு

பியாண்ட் தி சோல் ஆங்கில திரைப்படப்பிடிப்பில் ஆரிபிளக்ஸ் 535 ஒளிப்படக் கருவியுடன் ராமச்சந்திர பாபு
பியாண்ட் தி சோல் ஆங்கில திரைப்படப்பிடிப்பில் ஆரிபிளக்ஸ் 535 ஒளிப்படக் கருவியுடன் ராமச்சந்திர பாபு  
திரைக்கதை ஆசிரியர் லோகிதாஸ் மற்றும் இயக்குனர் பரதனுடன் ராமச்சந்திர பாபு.
திரைக்கதை ஆசிரியர் லோகிதாஸ் மற்றும் இயக்குனர் பரதனுடன் ராமச்சந்திர பாபு.  
எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயருடன்
எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயருடன்  
மலையாள நடிகர்கள் மம்முட்டி மற்றும் சைஜு குரூப்புடன்
மலையாள நடிகர்கள் மம்முட்டி மற்றும் சைஜு குரூப்புடன்  
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.