ராஜகுமாரி (திரைப்படம்)
ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.
ராஜகுமாரி | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் யூப்பிட்டர் எஸ். கே. மொக்தீன் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | எம். ஜி. ஆர், கே. மாலதி, எம். என். நம்பியார், எம். ஆர். சுவாமிநாதன், டி. எஸ். பாலையா, புளிமூட்டை ராமசாமி, கே. தவமணி தேவி, எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ். வி. சுப்பையா, நாராயண பிள்ளை, டி. கே. சரஸ்வதி, எம். எம். ராதாபாய் |
ஒளிப்பதிவு | டபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி. கிருஷ்ணன் |
படத்தொகுப்பு | டி. துரைராஜ் |
வெளியீடு | ஏப்ரல் 11, 1947 |
நீளம் | 14805 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,[2] மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.[1] இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார்.[3] இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[4] படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியில், ‘கதை, வசனம், டைரக்ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.[5]
மேற்கோள்கள்
- "மூன்று முதல்வர்களைக் கண்ட இயக்குநர்". தினத்தந்தி. பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.
- ராண்டார் கை (செப்டம்பர் 5, 2008). "Rajakumari 1947". The Hindu. பார்த்த நாள் 20 செப்டம்பர் 2016.
- "எஸ்.எம்.சுப்பையா என்னும் எஸ்.எம்.எஸ்.,நாயுடு". தினகரன். பார்த்த நாள் 20 செப்டம்பர் 2016.
- அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.
- ஆர்.சி.ஜெயந்தன் (2018 ஆகத்து 10). "அஞ்சலி: படைப்பாளிக்குள் ஒரு போராளி". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 10 ஆகத்து 2018.