ரவிசுப்பிரமணியன்
ரவிசுப்பிரமணியன் ஒரு தமிழக எழுத்தாளர், கவிஞர், ஆவணப்பட இயக்குநர் ஆவார்.
பன்முகம்
கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் முதுகலைப் பொருளியல் (1983-85) பயின்றவர். கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் என்ற நிலையில் அவரது பங்களிப்புகள் உள்ளன. சிறுகதைகளும் எழுதிவருகிறார். பாவலர் இலக்கிய விருது, சாரல் இலக்கிய விருது, அகல் இலக்கிய விருது, சென்னை இலக்கியத் திருவிழா விருது போன்ற விருதுகள் வழங்கும் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். பல தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார். 40 நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். சாகித்திய அகாடமி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இயக்குனர், படத்தொகுப்பாளர் பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குனராகவும், விஜய் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி இயக்குனர் மற்றும் முதுநிலை செய்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக கலை, இலக்கியப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். 65 வது தேசிய திரைப்பட விழாவின் விருதுக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.[1]
நூல்கள்
- ஒப்பனை முகங்கள் (கவிதைத்தொகுப்பு), அன்னம் பதிப்பகம், சிவகங்கை, 1990
- காத்திருப்பு (கவிதைத்தொகுப்பு), அன்னம் பதிப்பகம், சிவகங்கை, 1995
- வண்ணதாசன் கடிதங்கள் (கல்யாண்ஜியின் கடிதங்கள் தொகுப்பு), நஞ்சப்பன் வெளியீடு, கோவை, 1997
- காலாதீத இடைவெளியில் (கவிதைத் தொகுப்பு), மதிநிலையம், சென்னை, 2000
- சீம்பாலில் அருந்திய நஞ்சு (கவிதைத் தொகுப்பு), சந்தியா பதிப்பகம், சென்னை, 2006
- ஆளுமைகள் தருணங்கள் (கட்டுரைத் தொகுப்பு), காலச்சுவடு, நாகர்கோயில், 2014 [2]
- விதானத்துச் சித்திரம் (கவிதைத்தொகுப்பு), போதிவனம் பதிப்பகம், சென்னை, 2017 [3][4][5]
- That was a different season, (Selected poetry of Ravisubramaniyan, English Translation R.Rajagopalan), Authors Press, (ரவிசுப்பிரமணியனின் 51 தமிழ்க்கவிதைகளின் நூல் வடிவம். மொழியாக்கம் ஆர்.ராஜகோபாலன்) [6]
ஆவணப்படங்கள்
தொலைக்காட்சி நிறுவனங்களுக்காக 100க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர். இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், ஜெயகாந்தன், தி.ந.இராமச்சந்திரன் குறித்த ஆவணப்படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.
சிறுகதைகள்
- அதுவும் தாத்தா சொன்னதுதான் (கல்கி)
- உப்பிலியும் உருத்திரங்கண்ணனாரும் (வடக்கு வாசல், இலக்கிய இதழ், புதுதில்லி)
மெட்டு அமைத்த கவிதைகள்
மெட்டு அமைத்த சங்க இலக்கியப்பாடல்கள்
குறுந்தொகையில் உள்ள பிரிவுத்துயரைக் கூறுகின்ற கீழ்க்கண்ட மூன்று பாடல்களுக்கு மெட்டு அமைத்துள்ளார். திவாகர் சுப்பிரமணியம் பின்னணி இசை அமைக்க அனுக்கிரகா ஸ்ரீதர் பாடியுள்ளார்.[17]
விருதுகள்
- சிறந்த நூல் (கவிதை) விருது, (தமிழ்நாடு அரசு, 1991)
- இலக்கிய விருது (திருப்பூர் தமிழ்ச்சங்கம், 1996)
- ஆவணப்படத்திற்கான விருது (நியூஜெர்சி தமிழ்ச்சங்கம், 2004)
- சிற்பி இலக்கிய விருது (2015)[21]
- தி.க.சி.இயற்றமிழ் விருது (2017)[22]
- மா. அரங்கநாதன் இலக்கிய விருது (2018) [23][24][25]
- தஞ்சை பிரகாஷ் கவிதை விருது (2018)
உசாத்துணை
- தமிழில் யதார்த்த திரைப்படங்கள் அதிகளவில் உருவாக வேண்டும்: தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழு உறுப்பினர்கள், தினமணி, 5 மே 2018
- நெஞ்சிலிருந்து ஒரு சொல் – ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’, திண்ணை, 27 சூன் 2016
- விதானத்துச் சித்திரங்கள் / சில குறிப்புகள், லிபி ஆரண்யா, மலைகள் சூன் 3, 2017, இதழ் 123
- இசையும் உறவும் சஞ்சரிக்கிற பிரகாரத்து வெளி, ந.ஜெயபாஸ்கரன், மலைகள் சூன் 3, 2017, இதழ் 123
- ரவிசுப்பிரமணியனின் ரசவாதம்!, தி இந்து, 17 சூன் 2017
- ஆத்மாநாம் விருதுகள் – 2018, இந்து தமிழ் திசை, 27 அக்டோபர் 2018
- Indra Parthasarathy Documentary Part 1
- Indra Parthasarathy Documentary Part 2
- Ma.Aranganathan and A Few Poems
- The Writer Who Extended The Boundaries - D.Jayakanthan
- Sekizaar Adi-p-Podi T.N.Ramachandran : A documentary
- A Documentary on poet Thiruloga Seetharam
- திருலோகம் என்றொரு கவி ஆளுமை, தினமணி கதிர், 17 ஜனவரி 2016
- Documenting writer who propagated Bharati’s works, The Hindu, January 1, 2016
- மவுனத்தின் புன்னகை 5: ஆவணப்படங்கள்! தி இந்து, 29 ஜனவரி 2016
- திருலோக சீதாராம் என்றொரு கவியாளுமை, திண்ணை, 27 சூன் 2016
- இசைப்பாடலாகும் சங்க இலக்கியம்!, தி இந்து, 16 சூன் 2018
- குறுந்தொகை – 41 – பாலைத்திணை - அணிலாடு முன்றிலார்
- குறுந்தொகை – 28 - பாலைத்திணை – ஒளவையார்
- குறுந்தொகை - 20 - பாலைத்திணை - கோப்பெருஞ்சோழன்
- ரவி சுப்ரமணியத்துக்கு சிற்பி இலக்கிய விருது, தினமணி, 2 ஆகஸ்டு 2015
- நெல்லையில் தி.க.சி. விருது வழங்கும் விழா, தினமணி, 16 ஏப்ரல் 2017
- மா.அரங்கநாதன் இலக்கிய விருது, அந்திமழை, 16 மார்ச் 2018
- ஏப்ரல் 16ல் மா. அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழா, தினமணி, 13 ஏப்ரல் 2018
- மா.அரங்கநாதன் இலக்கிய விருது - முழு தொகுப்பு | ரவிசுப்ரமணியன், எஸ்.சண்முகம், சுருதி டிவி, 17 ஏப்ரல் 2018
வெளியிணைப்புகள்
- ஆவணப்படங்களுக்கு ஆதரவு இல்லை, ரவிசுப்பிரமணியன் நேர்காணல், தி இந்து, 23.11.2014
- காட்சியோடு இயைந்த கானம், தி இந்து, 18.12.2014
- மந்திரக் கோடுகளாலான ஓவியங்கள், தி இந்து, 27 டிசம்பர் 2015
- சங்கப் பாணர்களின் நீட்சியான கவிஞர், தி இந்து, 8 பிப்ரவரி 2016
- “திரைப்படத்தைக் காட்டிலும் ஆவணப்படம் இயக்குவது கடினம்!”- ரவிசுப்பிரமணியன், காமதேனு, 29 ஏப்ரல் 2018