அரம்பை

ரம்பை அல்லது அரம்பை என்பவர் தேவ லோகத்தில் வாழ்கின்ற அரம்பையர்களின் தலைவியாவார். பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய 60,000 அரம்பையர்களில் இவளும் ஒருத்தி.

சுக்கிரனை மயக்கும் ரம்பை.

பிரகஸ்பதியின் சாபம்

தேவ உலகத்தில் ரம்பையும், ஊர்வசியும் நடமாடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவ குருவான பிரகஸ்பதி அங்கு வருகை தந்தார். ஆனால் அவரை கவனியாது இருவரின் ஆட்டமும் தொடர்ந்ததால், பிரகஸ்பதி ரம்பையையும், ஊர்வசியையும் பூமியில் பிறக்கும் படி சாபம் தந்தார். [1]

இராவணனுக்கு சாபம்

ரம்பை குபேரனின் மகனான நளகூபனின் மனைவி. குபேரனின் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் இராவணன். எனவே ரம்பை இராவணனது மருமகளாகிறாள். ஒரு முறை இராவணன் ரம்பையின் அழகில் மயங்கி அவளை நெருங்க, தன்னுடைய உறவுமுறையை அவனிடம் விளக்கி விலகுகிறாள் ரம்பை. அதையும் கேளாமல் இராவணன் வன்புணர்வு செய்தமையை தன்னுடைய கணவனிடம் கூறுகிறாள். அதையறிந்த நளகூபன் பெண்ணின் அனுமதியின்றி இராவணன் சீண்டினால் அவன் தலை வெடித்துவிடும் என்று சாபமிடுகிறான். [2]

தலம்

திருக்கோட்டூர் கொழுந்தீசர் கோவிலில் ஈசனை நோக்கி இடது கால் ஊன்றி, வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்தபடி அக்னியில் நின்று தவம் செய்துள்ளாள். இவ்வாறன அமைப்புடன் ரம்பையின் உருவச்சிலை கோவிலில் உள்ளது.

கருவி

இன்றும் இனிக்கும் இதிகாசம் 12 - திருப்பூர் கிருஷ்ணன் (தினகரன்)

காண்க

தேவ உலகம்

ஆதாரம்

  1. ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
  2. http://www.kalachuvadu.com/issue-159/page78.asp கடிதங்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.