ரங்கன்திட்டு பறவைகள் காப்பகம்

ரங்கன்திட்டு பறவைகள் காப்பகம் பக்சி காசி என்றும் அழைக்கப்படுகின்றது.[1] இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். இது இம்மாநிலத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும், [2] 40 ஏக்கர் (16 ஹெக்டேர்) பரப்பளவு கொண்ட இச்சரணாலயமானது காவேரி ஆற்றின் கரையில் ஆறு தீவுகளைக் கொண்டுள்ளது.

அமைவிடம்

ரங்கன்திட்டு வரலாற்று நகரமான ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும் மைசூருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் (9.9 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் 2016–17 ஆம் ஆண்டில் சுமார் 3 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்தது, இது இந்தியாவின் முக்கியமான பறவைகள் சரணாலயமாக உள்ளது.

1645 மற்றும் 1648 க்கு இடையில் அப்போதைய மைசூர் மன்னர் காந்தீரவ நரசிம்மராஜா உடையார் காவேரி ஆற்றின் குறுக்கே கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது இத்தீவூகள் உண்டானது.


பறவையியலாளர் சலீம் அலி, இத்தீவுகள் பல வகையான பறவைகளுக்கு ஒரு முக்கியமான கூடு கட்டும் இடம் என்பதை கண்டறிந்து, மைசூர் மன்னரை 1940 ஆம் ஆண்டில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க தூண்டினார்.[3] இந்த சரணாலயம் தற்போது கர்நாடக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது, மேலும் சரணாலயத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, இதில் பாதுகாக்கப்பட்ட பகுதியை விரிவுபடுத்த அருகிலுள்ள தனியார் நிலங்களை வாங்குவதும் அடங்கும். 2014 ஆம் ஆண்டில், சரணாலயத்தைச் சுற்றியுள்ள சுமார் 28 சதுர கி.மீ பரப்பளவு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டது, அதாவது அரசாங்கத்தின் அனுமதியின்றி சில வணிக நடவடிக்கைகள் நடைபெற முடியாது..[4]

பறவைகள்

சுமார் 170 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இங்கு வந்து செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது. [5]இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில், மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, கரண்டிவாயன், வெண்கழுத்து நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், சிறிய சீழ்க்கைச்சிரவி, கொண்டை நீர்க்காகம், தடித்த அலகு மீன்கொத்தி, எக்ரெட், நீர்க்காகம், ஓரியண்டல் டார்டர், ஸ்பாட்-பில்ட் பெலிகன் மற்றும் ஹெரான் இங்கு தவறாமல் இனப்பெருக்கம் செய்கின்றது.

படிம நூலகம்


ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.