யோர்ச் சோரா

யோர்ச்-பியர் சோரா (Georges-Pierre Seurat) (2 டிசம்பர் 1859 – 29 மார்ச் 1891), ஒரு பிரெஞ்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியரும் ஒரு வரைஞரும் ஆவார்.

யோர்ச் சோரா
யோர்ச் சோரா, 1888
பிறப்புயோர்ச்-பியர் சோரா
திசம்பர் 2, 1859(1859-12-02)
பாரிசு, பிரான்சு
இறப்பு29 மார்ச்சு 1891(1891-03-29) (அகவை 31)
பாரிசு, பிரான்சு
தேசியம்பிரான்சியர்
அறியப்படுவதுஓவியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம்
அரசியல் இயக்கம்பின் உணர்வுப்பதிவுவாதம், புது உணர்வுப்பதிவுவாதம், புள்ளியியம்

இவர் வரைபட ஊடகத்தைப் புதுமையாகக் கையாள்வதில் வல்லவர். பிரிப்பியம், புள்ளியியம் என்னும் இரு ஓவிய நுட்பங்களை உருவாக்கியவர் இவரே. "லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம்" என்னும் தலைப்பிட்ட இவரது பெரிய அளவு ஓவியம், புது உணர்வுப்பதிவுவாதம் என்னும் பாணியை உருவாக்கியதன் மூலம் நவீன ஓவியத்தின் திசையையே மாற்றியதுடன், 19 ஆம் நூற்றாண்டின் ஓவியத்துக்கான ஒரு சின்னமாகவும் விளங்கியது.[1]

மேற்கோள்

  1. "Art Institute of Chicago". Artic.edu. பார்த்த நாள் 2014-03-13.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.