யூகி

யூகி [1] என்பவன் பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதைமாந்தர்களில் ஒருவன். இவன் பிரமசுந்தர முனிவருக்கும் பரமசுந்தரிக்கும் பிறந்த மகன். காட்டில் மிருகாபதி பெற்றெடுத்த மகன் உதயணனைப் பிரமசுந்தர முனிவர் வளர்த்தபோது உதயணனும் யூகியும் நண்பர்களாயினர். பிரமசுந்தரரும் சேடக முனிவரும் கற்பித்த கலைகளில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இயற்கை அறிவாலும், கற்பித்த செயற்கை அறிவாலும் அவர்கள் மேம்பட்டு விளங்கினர்.

பிரமசுந்தர முனிவர் இந்திரனால் தனக்கு அளிக்கப்பட்டதும், இசையால் யானைகளை வயப்படுத்த வல்லதுமான கோடபதி என்னும் யாழையும் உதயணனுக்கு வழங்கினார். அந்த யாழை உதயணன் மீட்டியபோது பல யானைகளின் வலிமையெல்லாம் ஒருங்கமையப்பெற்ற தெய்வயானை ஒன்று தன் பெரும் பிடிக் கூட்டத்துடன் உதயணனுக்கு அடிமைப்பட்டு வந்ததை அறிந்த பிரமசுந்தர முனிவர் தன் மகன் யூகியையும் உதயணனுக்கு உதவி புரியுமாறு உதயணனிடம் ஒப்படைத்தார்.

சேதி நாட்டு அரசன்

உதயணன் தன் தாய்மாமன் விக்கிரமனால் சேதி நாட்டு மன்னன் ஆனபோது அவனது முதலமைச்சனாக இருந்து உதயணனுக்குப் பேருதவியாக விளங்கினான். உதயணன் சேதி நாட்டு ஆட்சிப் பொறுப்பை யூகியிடம் ஒப்படைத்தான். பிரச்சோதனன் தாக்கியபோது, போர் புரிந்துகொண்டிருக்கையில், தன் நண்பன் உதயணன் சிறைபட்ட செய்தி வரவே, அவனுக்கு உதவுவதற்காகத் தன் போலி உடலை எரிக்கும்படி செய்து, தான் இறந்துவிட்டதாக மற்றவர்கள் நம்பும்படி செய்தான்.

மறைந்திருந்து நண்பனுக்கு உதவி

அடிக்குறிப்பு

  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.