கவரிமா

கவரிமா அல்லது யாக் (Yak) என்பது நீண்ட மயிர்க்கற்றைகளைக் கொண்ட இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம். காட்டுக் கவரிமா மாட்டினத்திலேயே பெரிய விலங்குகளுள் ஒன்று. நன்கு வளர்ந்த கவரிமாக்கள் 1.6 முதல் 2.2 மீட்டர் உயரமும் (தோள் வரை) 325 முதல் 1000 கிலோ எடையும் இருக்கும். பசுவின் எடை காளையின் எடையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியே இருக்கும்.

கவரிமா
நேப்பாளத்தின் அன்னபூர்ணா சுற்றில் ஒரு யாக்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Artiodactyla
குடும்பம்: Bovidae
பேரினம்: Bos
இனம்: B. grunniens
இருசொற் பெயரீடு
Bos grunniens
லின்னேயசு, 1766
வேறு பெயர்கள்

Poephagus grunniens
Bos mutus Przewalski, 1883

சாங்கு ஏரியில் ஒரு கவரிமா

கவரிமாக்கள் அவற்றின் பால், இறைச்சி, உரோமம் ஆகியவற்றுக்காகவும் சுமைகளை எடுத்துச்செல்லவும் வளர்க்கப்படுகின்றன. மேலும் கவரிமாவின் காய்ந்த சாணமானது திபெத்திய பீடபூமியில் ஒரு முக்கியமான எரிபொருளாகும். ஏனெனில் அப்பகுதியில் மரங்கள் எதுவும் இல்லாததால் இது ஒன்றே அங்கு எளிதாகக் கிடைக்கும் எரிபொருளாகும்.

கவரிமாவின் பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய் தேநீர் செய்யவும், விளக்கெரிக்கவும், வெண்ணெய்ச் சிற்பங்கள் செய்யவும் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Bos mutus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of vulnerable.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.