யம்துரோக் ஏரி

யம்துரோக் ஏரி (Yamdrok Lake) சீனாவின் திபெத்திய பீடபூமியில் உள்ள மூன்று புனித நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும். பனி படர்ந்த கொடுமுடிகள் மற்றும் ஓடைகளின் நடுவே அமைந்த யம்துரோக் ஏரி, கடல் மட்டத்திலிருந்து 14,570 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது 72 கிமீ நீளமும், 638 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்டது. [2]

யம்துரோக் ஏரி
யம்துரோக் ஏரி
ஆள்கூறுகள்28°56′N 90°41′E
வடிநில நாடுகள்சீனா
அதிகபட்ச நீளம்72 கிமீ
Surface area638 கிமீ
கடல்மட்டத்திலிருந்து உயரம்14,570 அடி
யம்துரோக் ஏரி[1]

யம்துரோக் ஏரியிலிருந்து 90 கிமீ தொலைவில் கியாண்ட்சே நகரமும், 100 கிமீ தொலைவில் லாசா நகரமும் அமைந்துள்ளது.

யம்துரோக் ஏரியின் மேற்குப் பகுதியில் பைதி கிராமத்தில் அமைந்த, திபெத்தின் பெரிய புனல் மின் நிலையம் 1996ல் நிறுவப்பட்டது.[3]

30 முதல் 60 மீட்டர் ஆழம் கொண்ட யம்துரோக் ஏரியின் பரப்பளவு 638 சதுர கிலோ மீட்டராகும். இறக்கை வடிவத்தில் அமைந்த இந்த ஏரியின் தெற்கு பகுதி விரிந்தும், வடக்குப் பகுதி குறுகியும் உள்ளது. இந்த ஏரி குளிர்காலத்தில் உறைந்து விடுகிறது.

பண்பாட்டு முக்கியத்துவம்

யம்துரோக் ஏரி, 1997
கவரிமா எனப்படும் யாக் மாடு

மானசரோவர் ஏரி போன்றே இந்த ஏரியும் திபெத்திய மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. [3]

திபெத்திய பௌத்த சமயத்தின் இரண்டாவது புத்தராக கருதப்படும் பத்மசம்பவர், கிபி எட்டாம் நூற்றாண்டில் பௌத்த சமயத்தை இப்பகுதியில் பரப்பினார். [3] யம்துரோக் ஏரிப் பகுதிகளில் முதலில் பௌத்த பிக்குணிகளின் முதல் விகாரை அமைக்கப்பட்டது. தற்போது இவ்விகாரையில் முப்பது பிக்குகள் மற்றும் பிக்குணிகள் உள்ளனர்.[4]

யம்துரோக் ஏரி பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்டுள்ளது. இந்த ஏரியில் உள்ள தீவுப் பகுதியில் பழைய கோட்டையும், அரண்மனையும் உள்ளது.

பொருளாதாரம்

ஏப்ரல் முதல் அக்டோபர் முடிய இந்த ஏரியில் மீன் பிடித் தொழில் நடைபெறுகிறது. யம்துரோக் ஏரியைச் சுற்றி புல்வெளிகள் அமைந்துள்ளது. கவரிமா எனும் யாக் மாட்டின் பால் மற்றும் பால் பொருட்கள், தோல் வணிகத்தில் உள்ளது.

தட்ப வெப்பம்

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.