மோகன் தாரியா

மோகன் தாரியா (14 பிப்பிரவரி 1925- 14 அக்டோபர் 2013) இந்திய அரசியல்வாதி, நடுவணரசு அமைச்சர், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.[1]

மோகன் தாரியா
பிறப்பு14 பெப்ரவரி 1925
ராய்கட் மாவட்டம்
இறப்பு14 அக்டோபர் 2013 (அகவை 88)
படித்த இடங்கள்
பணிஅரசியல்வாதி, வழக்கறிஞர்
விருதுகள்பத்ம விபூசண்

அரசியல் வாழ்க்கை

மகாராட்டிர மாநிலத்தில் ரைகத் மாவட்டத்தில் பிறந்த மோகன் தாரியா வழக்கறிஞராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் பிரஜா சோசலிஸ்ட் என்ற கட்சியில் இணைந்தார். மோகன் தாரியா இரு முறை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அமைச்சரவையில் இராசாங்க அமைச்சராக இருந்தார்.

பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி சட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடினார். காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகினார். அதனால்  இளம் துருக்கியர் என்று இவரை அழைத்தனர். பின்னர் பாரதிய லோக தளம் என்ற கட்சியில் சேர்ந்தார். மொரார்சி தேசாய் பிரதமராக இருந்தபோது அவருடைய அமைச்சரவையில் மோகன் தாரியா வணிகத்துறை அமைச்சர் ஆனார்.

தம் இறுதிக் காலத்தில் தீவிர அரசியலிலிருந்து விலகி வன்ரை என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பைத் தொடங்கினார். காடுகளை வளர்த்துப் பேணும் நோக்கத்தில் இலக்கக் கணக்கில் மரக்கன்றுகளை வழங்கும் பணியை முடுக்கிவிட்டார்.

2005 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசு பத்ம விபூசண் விருது வழங்கி கௌரவித்தது.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.