மொபுட்டு செசெ செக்கோ

மொபுட்டு செசெ செக்கோ ந்குக்கு ங்பந்து வ ச பாங்கா (Mobutu Sese Seko Nkuku Ngbendu wa za Banga, அக்டோபர் 14, 1930-செப்டம்பர் 7, 1997) 1965 முதல் 1997 வரை சயீர் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். சயீர் ஜூன் 1960இல் பெல்ஜியம் இடம் இருந்து விடுதலை வந்ததுக்கு பிறகு பிரதமர் பத்திரிசு லுமும்பா மொபுட்டுவை இராணுவத் தலைவராக அறிவித்தார். ஆனாலும் செப்டம்பர் 1960இல் மொபுட்டு இராணுவ புரட்சி மேற்கொண்டு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்து இவரே பிரதமர் பதவியில் ஏறினார். 1967இல் இவரின் அரசியல் கட்சி, மக்களின் புரட்சி இயக்கம் தொடங்கி 1990 வரை இக்கட்சி மட்டுமே ஆட்சியில் ஒழுங்கான கட்சியாக இருந்தது. முதலாம் காங்கோ போரில் லோரான்-டெசிரே கபீலா இவரை பதவியிலிருந்து கலைத்தார்.

Mobutu (1973)
மொபுட்டு செசெ செக்கோ
Mobutu Sese Seko
சயீரின் தலைவர்
பதவியில்
நவம்பர் 24, 1965  மே 16, 1997
பிரதமர் பலர்
முன்னவர் ஜோசஃப் காசா-வுபு
பின்வந்தவர் லோரான்-டெசிரே கபீலா
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 14, 1930(1930-10-14)
லிசாலா, பெல்ஜியக் காங்கோ
(இன்றிய கொங்கோ மக்களாட்சிக் குடியரசு)
இறப்பு செப்டம்பர் 7, 1997(1997-09-07) (அகவை 66)
ரபாட், மொராக்கோ
தேசியம் காங்கோலீசர்
அரசியல் கட்சி மக்களின் புரட்சி இயக்கம்
வாழ்க்கை துணைவர்(கள்) மரீ- ஆண்டுவனெட் மொபுட்டு(காலமானார்)
போபி லடாவா

மொபுட்டு தலைவராக இருக்கும்பொழுது நாட்டு பொருளாதாரத்திலிருந்து $5 பில்லியன் திருடியுள்ளார்.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.