மைக்ரோசாப்ட் ஆபிஸ்

மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிப்பானது மைக்ரோசாப்ட்டினால் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மாக்கிண்டோஷ் கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட ஓர் அலுவலக மென்பொருளாகும். மிக அண்மைக்காலப் பதிப்புகள் சேவர் மென்பொருளையும் கொண்டுள்ளன

இதன் தற்போதைய பதிப்பான மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2016 ஆனது 22 செப்டம்பர் 2015 அன்று வெளியிடப்பட்டது.

வரலாறு

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 90 களில் அறிமுகமானது. ஒவ்வோர் மென்பொருளும் தனித்தனியே விற்பனையாகி வந்த காலத்தில் மென்பொருடகளை இணைத்து மொத்த விலையிலும் இலாபகரமாக விற்றதே மைக்ரோசாப்டின் வெற்றிக்கு வழிவகுத்தது. மைக்ரோசாட் ஆபிஸ்ஸின் முதற் பதிப்பானது வேட், எக்ஸ்ஸெல், பவர்பாயிண்ட் உள்ளடக்கியிருந்தது இதன் Pro பதிப்பானது ஆக்ஸ்ஸஸ் மற்றும் ஸெடியூல் பிளஸ் ஐ உள்ளடக்கியிருந்தது. காலவோட்டத்தில் தொழில் நுடபரீதியாக இதிலுள்ள மென்பொருட்கள் கூடுதலாக ஒத்தியங்க ஆரம்பித்தன. எடுத்துக் காட்டாக இதிலுள்ள பிழைதிருத்தி எல்லா மென்பொருட்களிற்கும் பொதுவானது. இதைவிட பிரயோகங்களிற்கான விஷ்வல் பேஸிக் போன்றவை பொதுவானவை.

2006 ஆம் ஆண்டின் படி உரையாவணங்களை உருவாக்குதல், விரிதாட்கள் மற்றும் அலுவலக presentation கோப்புகளின் நியம மென்பொருளாக இது காணப்படுகின்றது. இது வர்தக ரீதியாக லோட்டஸ் ஸ்மாட் ஸுயிட் மற்றும் கோரல் ஆபீஸ் என்பவற்றுடன் இலவசமான சண் மைக்ரோ சிஸ்டத்தின் ஓப்பிண் ஆபிஸ் மென்பொருளுடனும் போட்டியிடுகின்றது. இனி வருங்காலத்தில் கூகிளின் ரைட்லி, கூகிள் விரிதாட்கள் போன்ற மென்பொருட்களுடன் கடுமையான போட்டியிருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

பொதுவான ஆபிஸ் மென்பொருட்கள்

கிழ்வரும் மென்பொருட்களானது ஆபிஸ் மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் பேஸிக் பதிப்பில் வேட், எக்ஸல், அவுட்லுக் மாத்திரமே யுள்ளன.

வர்ட்

மைக்ரோசாப்ட் வேட் ஓர் உரையாவண மென்பொருளாகும். இது வர்தக ரீதியாக மிக அதிகமான பங்குள்ளதுடன் ஓர் நியம மென்பொருளாகவும் விளங்குகின்றது. வேட் 2003 ஆனது XML முறையிலமைந்த கோப்புக்களையும் ஆதரிக்கின்றது. கூகிள் டாக்ஸ்சும் ஸ்பிரெட்ஷீட்சும் இதனுடன் கடுமையாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எக்ஸ்ஸெல்

ஆரம்பத்தில் லோட்ட்ஸ் 1-2-3 மென்பொருளுடன் போட்டியாளராகவே அறிமுகமாகிப் பின்னர் வெற்றி கொண்டு விரிதாட்களுக்கான நியம மென்பொருளாகியது. கூகிள் விரிதாட்கள் இதனுடன் கடுமையாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கபடுகின்றது.

ஔட்லுக்

மைக்ரோசாப்ட் அவுட்லுக் மின்னஞ்சல் மென்பொருளாகும். மொஸிலா தண்டபேட் மற்றும் ஜிமெயில் போன்றவை இதனுடன் போட்டியிடுகின்றன.

பவர் பாயிண்ட்

மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் சிலைடுகளை உருவாக்கிக் காண்பிக்கப் பயன்படுகின்றது. இது உரைகள், படங்கள் போன்றவற்றைக் காண்பிக்கும் வசதியுள்ளது.

ஒருங்குறி ஆதரவு

விண்டோஸ் 2000 பதிப்பானது தமிழ் ஒருங்குறியை ஆதரித்தாலும் ஆபிஸ் 2000 பதிப்பானது விண்டோஸ் 2000 பதிப்பிற்கு முன்னரே வெளிவிடப்பட்டதால் தமிழ் ஒருங்குறிக்கான ஆதரவு ஆபிஸ் XP உடனேயே அறிமுகமானது.

ஒருங்குறியில் தமிழ் உள்ளீடு

இது ஓப்பிண் ஆபிஸ் மென்பொருளைப் போன்றல்லாது தமிழ் போன்ற மொழிகளின் ஆதரவை கீழுழ்ழ உரையாவணக் கட்டமைப்பின் மூலமே வழங்கி வருகின்றது. எ-கலப்பை கட்டுரையில் தமிழை உட்புகுத்துவது பற்றிக் காண்க.

தமிழ் எழுத்துப் பிழைதிருத்தம்

தமிழ் எழுத்துப் பிழைதிருத்தமானது ஆபிஸ் 2003 உடன் அறிமுகம் செய்யப் படுகின்றது. இது மைக்ரோசாப்ட் சரிபார்க்கும் கருவிகள் (Microsoft Proofing Tools) என்னும் இறுவட்டுடன் வெளிவருகின்றது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட வேறு பல இந்திய மொழிகளுடன் 50 மொழிகளுக்கான இறுவட்டாக வெளிவந்துள்ளது.

தமிழ் மொழி இடைமுகம்

இந்திய மொழிகளில் ஹிந்தி தவிர்ந்த (ஏனெனில் ஹிந்தி ஆபிஸ் 2003 என்ற தனியான பதிப்பு வெளிவந்ததால்) தமிழ், கன்னடம், மராத்தி, குஜராத்தி உட்படப் பல மொழிகளில் ஆபிஸ் மொழி இடைமுகமானது வெளிவந்துள்ளது. இது ஏறத்தாழ 80% இடைமுகத்தை வட்டார மொழிகளில் வழங்குகின்றது.

சேவைப்பொதிகளை ஒருங்கிணைத்தல்

ஆபிஸ் XP, ஆபிஸ் 2003 மற்றும் அதனில் இருந்தான பதிப்புக்கள் சேவைப்பொதிகளை ஒருங்கிணைதத நிறுவல்களை ஆதரிக்கும் இதனிலும் பழைய பதிப்புக்கள் இவற்றை ஆதரிக்காது. ஆபிஸ் 2000 இல் நிர்வாக நிறுவல்களை ஆரம்பிக்கலாம் எனினும் சேவைப் பொதிகளை ஒருங்கிணைக்க இயலாது. ஆபிஸ் XP இல் சேவைப் பொதியை ஒருங்கிணைக்கும்போது குறிப்பாக ஆபிஸ் XP SP3 (சேவைப்பொதி 3) அம்மென்பொருளை activate பண்ணுமாறு கோரும் அவ்வாறு செய்யாவிடின் மென்பொருளானது 50 தடவைகள் மாத்திரமே ஆரம்பிக்கவியலும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.