மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365

ஆபிஸ் 365 என்பது ஆண்டு அல்லது மாத சந்தா செலுத்திப் பெறும் இணையவழி மைக்ரோசாப்ட் ஆபிஸ் பொதிகளையும் கூடுதல் மென்பொருள் சேவைகளையும் உள்ளடக்கிய தொகுப்பாகும். இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் தளத்தைத் தழுவிய மென்பொருட்களையும் சேவைகளையும் இணையம் வழியாக வழங்குகிறது.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
தொடக்க வெளியீடுசூன் 28, 2011 (2011-06-28)
அண்மை வெளியீடு2013 / பெப்ரவரி 27, 2013 (2013-02-27)
மென்பொருள் வகைமைஇணைய ஆபிஸ் தொகுப்பு, கூடுதல் மென்பொருள் சேவைகள்
உரிமம்சந்தாக் கட்டணம்
இணையத்தளம்office.microsoft.com

மைக்ரோசாப்ட்டின் வணிக உற்பத்தித்திறன் இணையப் பொதிக்கு வாரிசாக உருவாக்கப்பட்ட இது துவக்கத்தில் மின்னஞ்சல் சேவை வழங்கி, சமூக வலையமைப்பு மற்றும் கூட்டாண்மை, மற்றும் மேகக்கணி சேமிப்பு ஆகிய சேவைகளை மட்டுமே தருவதாயிருந்தது. எனவே முதலில் எக்ஸ்சேஞ்சு, லிங்க், ஷேர்பாயிண்ட், ஆபிஸ் இணைய பயன்பாட்டுச் செயலிகளை உள்ளடக்கி இருந்தது. இவற்றை மேசைக்கணினியின் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 பயன்பாடுகளுடன் ஒருங்கிணைத்து பெருவணிக நிறுவனங்களுக்கு வழங்கியது. ஆபிஸ் 2013 வெளியீட்டிற்குப் பிறகு ஆபிஸ் 365 விரிவாக்கப்பட்டு பலவகைப்பட்ட நிறுவனங்களுக்கும் பொதுப் பயனர்களுக்கும் பயன்படும் வகையில் புதிய திட்டங்கள் இணைக்கப்பட்டன. மேசைக்கணினி ஆபிஸ் பொதியை ஒரேயடியாக வாங்கவியலாத மாதச்சந்தா கட்டி பயன்படுத்த விரும்பிய பொது நுகர்வாளர்களுக்கு ஏற்ற வகையில் திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட்டது.[1]

அக்டோபர் 2010இல் தொடங்கிய பீட்டா சோதனை முடிவுற்றவுடன் ஆபிஸ் 365 சூன் 28, 2011இல் முறையாக வெளியிடப்பட்டது.[2]

மேற்சான்றுகள்

  1. "Office 2013 vs. Office 365: Should you buy or rent?". பார்த்த நாள் 15 மார்ச்சு 2013.
  2. "Microsoft Office 365 Launching June 28". PC Magazine. பார்த்த நாள் 14 March 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.