மேலாண்மையும் தொழினுட்பத்தினதும் பிராந்திய நிறுவனம்
மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பிராந்திய நிறுவனம் (Regional Institute of Management and Technology (RIMT) என்றறியும் இந்த தனியார் கல்வி நிறுவனம், இந்திய பஞ்சாப் மாகாணத்தின் பதேகாட் சாகிப் மாவட்டத்திலுள்ள மண்டி கோபிந்த்கர் எனும் நகர்ப்புற பகுதியின் அம்பாலா – லூதியானாவை இணைக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை 1-ல் (NH 1) அமைந்துள்ளது. 2001-ம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்வி நிறுவனம், "சிறீ ஓம் பிரகாஷ் பன்சால் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை" வழிகாட்டலின் கீழ் நிறுவப்பட்டதாகும். பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்கிவரும் ஒரு தனியார் நிறுவனமான இது, ஐ. கே. குஜரால் பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகம் (IKGPTU), மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவை (AICTE) சார்ந்ததாகும்.[1]
குறிக்கோளுரை | तमसो मा ज्योतिर्गमय |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | "From darkness, lead us unto Light" |
வகை | நிறுவனங்களின் குழு |
உருவாக்கம் | 1998 |
தலைவர் | உகம் சந்த் பன்சால் |
கல்வி பணியாளர் | 500 (அண்ணளவாக) |
நிருவாகப் பணியாளர் | 900(அண்ணளவாக) |
மாணவர்கள் | 12000(அண்ணளவாக) |
அமைவிடம் | மண்டி கோபிந்த்கர், பஞ்சாப், ![]() |
சேர்ப்பு | ஐகேஜிபிடியு (IKGPTU), ஏஐசிடிஇ (AICTE) |
இணையத்தளம் | rimt.ac.in |
சான்றாதாரங்கள்
- "Regional Institute of Management and Technology, Mandi Gobindgarh". www.minglebox.com (ஆங்கிலம்) (© 2012). பார்த்த நாள் 2016-07-29.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.