மேற்கு காமெங் மாவட்டம்
மேற்கு காமெங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்
மேற்கு காமெங் மாவட்டம் | |
---|---|
![]() மேற்கு காமெங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | போம்தில்லா |
பரப்பு | 7,422 km2 (2,866 sq mi) |
மக்கட்தொகை | 87013[1] (2011) |
படிப்பறிவு | 69.4%[1] |
பாலின விகிதம் | 755[1] |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பெயர்க் காரணம்
பிரம்மபுத்ரா நதியின் ஒரு கிளையான காமெங் ஆறு இங்கு பாய்வதால், இந்த மாவட்டத்திற்கு இந்த பெயர் வந்தது. முன்பு காமெங் மாவட்டம் என்ற பெயருடன் இருந்த இந்த மாநிலமானது, அரசியல் காரணங்களுக்காக ஜூன் 1, 1980 ஆம் ஆண்டு கிழக்கு மற்றும் மேற்கு காமெங் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. [2]
அமைப்பு
சுமார் 7442 சதுர கிலோமீடர்,[3]பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தின் எல்லையாக வடக்கே திபெத் நாடும் , மேற்கே பூட்டான் நாடும், தெற்கே அசாம் மாநிலமும் உள்ளன.இமயமலையின் தொடர்கள் நிறைந்த இந்த மாவட்டம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5690 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் உயர்ந்த மலைச்சிகரமாக கங்தே உள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது. திரிஜினோ,ரூப,போம்தில்லா,டிரங்,கலக்டங்,பலேமு,பழுக்போங்,ஜமெரி,சின்சுங்,நப்ரா,தெம்பங்,ஷேர்காஒன். இந்த மாவட்டம் 4 சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.[4]
மக்கள்
இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான மொன்பா, திறங், புட், லிஸ் ,கலக்டோங் மொன்பா , மிஜி, சேர்துக்பெண், அக, மற்றும் கோவா ஆகிய இவர்கள் மட்டுமே 78% சதவிகிதம் இருக்கின்றனர். மற்ற இனங்களான தக்ப, லிஷிபா, சுக்பா, புட்பா ஆகியவர்கள் சிறிய அளவில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் புத்த மதத்தை பின்பற்றினாலும், டோன்யி-போலோ, இந்து மதம் ஆகியவற்றை பின்பற்றுபவர்களும் இங்கு உள்ளனர்.
சுற்றுலாத் தளங்கள்
கழுகுக் கூடு சரணாலயம் மற்றும் செஸ்ஸா ஆர்சிட் சரணாலயம் ஆகிய இரண்டும் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.[5][5]
மேற்கோள்கள்
- "District Census 2011". Census2011.co.in. பார்த்த நாள் 2014-01-07.
- Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
- Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Arunachal Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7.
- "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.
- Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்த்த நாள் September 25, 2011.