மேடிசன் சதுக்கத் தோட்டம்
மேடிசன் ஸ்குவேர் கார்டென் (ஆங்கிலம்: Madison Square Garden), தமிழ் மொழிபெயர்ப்பு மேடிசன் சதுக்கத் தோட்டம், அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் நியூயார்க் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானமும், நாடகசாலையும் ஆகும். இந்த மைதானத்தில் என். பி. ஏ.-ன் நியூ யோர்க் நிக்ஸ் அணி, என். எச். எல்.-ன் நியூ யோர்க் ரேஞ்சர்ஸ், மற்றும் வேறு சில விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இம்மைதானம் "உலகில் மிகவும் புகழ்பெற்ற மைதானம்" (World's Most Famous Arena) என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறது.
Madison Square Garden மேடிசன் ஸ்குவேர் கார்டென் மேடிசன் சதுக்கத் தோட்டம் | |
---|---|
"எம்.எஸ்.ஜி.", "த கார்டென்" | |
![]() இன்றிய மேடிசன் சதுக்கத் தோட்டம் | |
இடம் | 4 பென்சில்வேனியா பிளாசா மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், NY 10121 |
திறவு | முன்னாள் இடங்கள்: 1879, 1890, 1925 இன்றிய இடம்: பெப்ரவரி 14 1968 |
உரிமையாளர் | கேபிள்விஷன் (மேடிசன் ஸ்குவேர் கார்டென், எல்.பி. வழி) |
ஆளுனர் | கேபிள்விஷன் |
கட்டிட விலை | $123 மில்லியன் |
கட்டிடக்கலைஞர் | சார்ல்ஸ் லக்மன் துணைவர்கள், எலெர்பி பெக்கெட் |
குத்தகை அணி(கள்) | நியூ யோர்க் ரேஞ்சர்ஸ் (என். எச். எல்.) (1926-இன்று) நியூ யோர்க் நிக்ஸ் (என். பி. ஏ.) (1946-இன்று) நியூ யோர்க் லிபர்ட்டி (டபிள்யூ. என். பி. ஏ.) (1997-இன்று) நியூ யோர்க் டைட்டன்ஸ் (என். எல். எல்.) (2007-இன்று) நியூ யோர்க் நைட்ஸ் (ஏ. எஃப். எல்.) (1988) நியூ யோர்க் சிட்டிஹாக்ஸ் (ஏ. எஃப். எல்.) (1997-1998) நியூ யோர்க் அமெரிக்கன்ஸ் (என். எச். எல்.) (1925-1942) என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு கூடைப்பந்துப் போட்டிகள் (1943-1948,1950) பிக் ஈஸ்ட் கூட்டம் கூடைப்பந்துப் போட்டிகள் (1983-இன்று) |
அமரக்கூடிய பேர் | கூடைப்பந்தாட்டம்: 19,763 பனி ஹாக்கி: 18,200 கச்சேரி: 20,000 நாடகசாலை: 5,600 |
படங்கள்
- கூடைப்பந்து விளையாட்டுக்கு ஆயத்தப்படுத்த மேடிசன் சதுக்கத் தோட்டம்
- நியூ யோர்க் ரேஞ்சர்ஸ் பனி ஹாக்கி போட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.