மேகி
மேகி (ஆங்கிலத்தில் Maggi) என்பது நெஸ்லே நிறுவனம் உரிமை கொண்டுள்ள வணிகச் சின்னம் ஆகும். சூப், குழைமா (நூடுல்சு) ஆகியவற்றை உடனடியாகத் தயாரிக்கவல்ல உணவுப் பொருட்களுக்கு இந்த வணிகப் பெயரினை வைத்துள்ள நெஸ்லே நிறுவனம், 1947ஆம் ஆண்டு முதல் தனதாகக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 1872ஆம் ஆண்டு ஜூலியஸ் மேகி என்பவரால் மூல நிறுவனம் நிறுவப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு குறித்த சர்ச்சைகள்
2015ஆம் ஆண்டு
இந்தியாவில் மேகி நூடுல்சு விற்பனைக்குத் தடை
- ஏப்ரல் 2015 - அனுமதிக்கப்பட்ட அளவினைவிட ஈயம் அதிகமாக இருப்பதாகக் காரணம் தெரிவித்து, ஏறத்தாழ 2,00,000 மேகி நூடுல்சு பொட்டலங்களை திரும்பப் பெறுமாறு உத்திரப் பிரதேச உணவுக் கட்டுப்பாட்டுத் துறை ஆணையிட்டது.
- 4 சூன் 2015 - மேகி உள்ளிட்ட நான்கு வகையான நூடுல்சுகளை விற்பனை செய்வதற்கு மூன்று மாதத் தடையினை தமிழக அரசு அறிவித்தது[1]. உத்தரகாண்ட் அரசு, மேகி நூடுல்சை தனது மாநிலத்தில் விற்பனை செய்வதற்கு தடை விதித்தது[2].
மேற்கோள்கள்
- "மேகி உள்பட 4 வகை நூடுல்ஸுக்கு தமிழகத்தில் தடை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு". தினமணி. 5 சூன் 2015. http://www.dinamani.com/tamilnadu/2015/06/05/மேகி-உள்பட-4-வகை-நூடுல்ஸுக்கு-/article2850086.ece. பார்த்த நாள்: 5 சூன் 2015.
- "Maggi banned in Uttarakhand". தி இந்து. 4 சூன் 2015. http://www.thehindu.com/news/national/other-states/maggi-banned-in-uttarakhand/article7281943.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 5 சூன் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.