மெல்வில் தீவு, ஆஸ்திரேலியா
மெல்வில் தீவு (Melville Island) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் கிழக்குத் திமோர் கடலில் அமைந்துள்ளது.
உள்ளூர் பெயர்: யெர்மால்னர் | |
---|---|
![]() டிவி தீவுகள் | |
புவியியல் | |
அமைவிடம் | திமோர் கடல் |
ஆள்கூறுகள் | 11°33′S 130°56′E |
தீவுக்கூட்டம் | டிவி தீவுகள் |
முக்கிய தீவுகள் | மெல்வில், இரிட்டிட்டு |
நிர்வாகம் | |
ஆஸ்திரேலியா | |
ஆட்சிப்பகுதி | ![]() |
பெரிய குடியிருப்பு | மிலிகபிட்டி (மக். 559) |
மக்கள் | |
மக்கள்தொகை | ca. 1030 |
இனக்குழுக்கள் | டிவி மக்கள் |
இத்தீவின் பெரிய நகரம் மிலிகபிட்டி, இதன் மக்கள் தொகை 559 பேர். இரண்டாவது பெரிய நகரம் பிலான்கிம்பி, இங்கு 440 பேர் வசிக்கிறார்கள். இவர்களை கிட்டத்தட்ட 30 பேர் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள்.
மெல்வில் தீவு டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் பரப்பு 2,234 மைல்² (5,786 கிமீ²). டிவி மொழியில் இது யெர்மால்னர் என அழைக்கப்படுகிறது. இத்தீவின் தென் முனையில் 55 மீட்டர்கள் தொலைவில் இரிட்டிட்டு தீவு உள்ளது. இதன் பரப்பளவு 1.7 கிமீ².
மெல்வில் தீவும், பாத்தர்ஸ்ட் தீவும் இணைந்து டிவி தீவுகள் என அழைக்கப்படுகின்றது.
1644 ஆம் ஆண்டு இத்தீவைக் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஏபெல் டாஸ்மான் எனக் கருதப்படுகிறது.
இதன் காலநிலை வெப்பவலயத்தைச் சேர்ந்தது.