முலைப்பால் வெல்லம் தாளாமை
முலைப்பால் வெல்லம் தாளாமை (Lactose intolerance) என்பது பாலிலும் பாலிலிருந்து பெறப்படும் பிற உணவுப்பொருட்களிலும் இருக்கும் முலைப்பால் வெல்லம் அல்லது இலாக்டோசு எனப்படும் மாவுச்சத்தை உடல் ஏற்காமல் போகும் நிலையைக் குறிக்கும். பொதுவாக இச்சக்கரை விலங்குகளின் உடலில் உயிர்வேதியியல் வினைகளூடாக உடைக்கப்பட்டு குடல் வழியாக குருதியில் உறிஞ்சிக்கொள்ளப்படும். மனிதர்கள் வளர வளர இவ்வினைகள் நடைபெறுவதற்கு இன்றியமையாதத் தேவையான பானொதி (இலாக்டேசு) சுரப்பது குன்றிவிடுவதனாலேயே இவ்விளைவு ஏற்படுகிறது என்று கருதப்படுகிறது. இதன் சுரப்பு குறைவது வெவ்வேறு இனக்குழுக்களில் வெவ்வேறு அளவுகளில் அமைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. வட ஐரோப்பாவில் 5% முதல் சில ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் 90% வரை இவ்விளைவு நிலவுகிறது.[1]
முலைப்பால் வெல்லம் தாளாமை | |
---|---|
![]() | |
முலைப்பால் வெல்லம் (disaccharide of β-D-galactose & β-D-glucose) பொதுவாக பானொதியால் உடைக்கப்பட்டு செரிக்கப்படுகிறது. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
ஐ.சி.டி.-10 | E73. |
ஐ.சி.டி.-9 | 271.3 |
OMIM | 223100 150220 |
நோய்களின் தரவுத்தளம் | 7238 |
MedlinePlus | 000276 |
ஈமெடிசின் | med/3429 ped/1270 |
Patient UK | முலைப்பால் வெல்லம் தாளாமை |
MeSH | D007787 |
குறிப்புகளும் மேற்கோள்களும்
- Bulhoes, A. C., et. al. (2007-11). "Correlation between lactose absorption and the C/T-13910 and G/A-22018 mutations of the lactase-phlorizin hydrolase (LCT) gene in adult-type hypolactasia". Brazilian Journal of Medical and Biological Research. பார்த்த நாள் 2008-07-19.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.