மும்பை மோனோரயில்

மும்பை மோனோரயில் என்பது மும்பை நகரில் அமைந்துள்ள ஒற்றைத் தண்டூர்தி போக்குவரத்து ஆகும்.

Mumbai Monorail

தகவல்
உரிமையாளர்Mumbai Metropolitan Region Development Authority
அமைவிடம்மும்பை, Maharashtra, India
போக்குவரத்து
வகை
Straddle-beam monorail
மொத்தப் பாதைகள்1
நிலையங்களின்
எண்ணிக்கை
18
பயணியர் (ஒரு நாளைக்கு)125,000 (estimate)
தலைமையகம்Mumbai
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
1 February 2014
வண்டிகளின் எண்ணிக்கை6
தொடர்வண்டி நீளம்4 coaches
Headway15 minutes
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம்19.54 km (12.14 mi)[1] (Operational: 8.9 km (5.5 mi))
மின்னாற்றலில்750 V DC
சராசரி வேகம்32 km/h (20 mph)[2]
உச்ச வேகம்80 km/h (50 mph)
வழித்தட வரைபடம்

வார்ப்புரு:Mumbai Monorail

சிறப்பம்சங்கள்

அதன் சிறப்பம்சங்களில் பதின்மூன்று கீழே தரப்படுகின்றன:

  1. இந்தியாவின் முதல் மோனோரயில், உலகின் இரண்டாவது நீண்ட தூர மோனோரயில்[3][4][5] என்ற பெருமை மும்பையில் ஜெகப் வட்டத்திலிருந்து வாடலா வழியாக செம்பூர் ரயில் நிலையம் செல்லும் இந்த சேவையை சேரும்.
  2. இருபது கிலோமீட்டர் தூரம் சேவை தரும் இந்த ரயிலினால் மூன்று இலட்சம் மக்கள் பயனடைவார்கள்
  3. சுமார் 80,000 பேருந்து பயணங்கள், 28,000 டாக்ஸி மற்றும் ஆட்டோ பயணங்கள் இதனால் மிச்சமாகும்.
  4. ரயில் பாதையோரம் (2 கிலோமீட்டர் சுற்றளவில்) இருக்கும் 22 இலட்சம் மக்கள் இதனால் பயனடைவார்கள்
  5. முதல் கட்ட மோனோரயில் 11 நிறுத்தங்கள் கொண்டதாக அமையும். 25 நிமிடங்களில் சேருமிடத்தினை அடையும்.
  6. இரண்டாம் கட்டம் 8.2 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகவும் சேருமிடத்தினை 19 நிமிடங்களிலும் அடையும். அதில் ஏழு நிறுத்தங்கள் இருக்கும்.
  7. முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட சேவை உண்டு.
  8. ஒவ்வொரு நான்கரை நிமிடங்களுக்கு ஒரு ரயில்.
  9. மொத்தம் பதினெட்டு ரயில் நிலையங்கள் -- ஒவ்வொன்றும் சமச்சீர் நிலத்திலிருந்து பதினோரு அடி உயரத்தில்.
  10. நூற்று ஐம்பது மக்கள் கொள்ளளவு கொண்ட பெட்டிகள்.
  11. ஒவ்வொரு ரயிலிலும் நான்கு பெட்டிகள். மொத்தம் 600 பேர் பிரயாணம் செய்யலாம்.
  12. எட்டு முதல் பத்து பேருந்து கொள்ளளவுக்கு ஒரு மோனோரயில் சமம்.
  13. இன்னும் பல தடங்களில் மோனோரயில் திட்டமிடப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு மலபார் மலை முதல் பந்திரா-குர்லா (ஹாஜி அலி தர்கா வழியாக)

கட்டுமானம்

இதன் கட்டுமானம் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

போக்குவரத்து துவக்கம்

மோனோ ரயில் திறப்புவிழா பெப்ரவரி 1 2014 அன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் பெப்ரவரி 2 2014 பயணம் செய்யலாம்[6][7].

மேற்கோள்கள்

  1. "Water transport slips out of MMRDA's hands". Mumbai Mirror. பார்த்த நாள் 27 August 2010.
  2. "Brace up for ride in a metro, News – City". Mumbai Mirror. பார்த்த நாள் 17 February 2012.
  3. "Fast forward: Mumbaikars can board India’s first monorail starting Sunday". financialexpress. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2014.
  4. "World's second longest monorail corridor". economictimes. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2014.
  5. "உலகின் இரண்டாவது மோனோ ரயில் மும்பையில்". தினமலர். பார்த்த நாள் 1 பெப்ரவரி 2014.
  6. "Mumbai monorail to be inaugurated today". NDTV. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2014.
  7. "தேர்தல் நெருங்குகிறது: வரும் ஞாயிறு முதல் மும்பையில் மோனோ ரயில்". தினமணி. பார்த்த நாள் 1 பெப்ரவரி 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.