முன்னிலை (இலக்கணம்)

மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும். பேசுபவர் யாரை விழித்துப் பேசுகிறாரோ, அவரை அல்லது அவர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் முன்னிலை என்பதனுள் அடங்கும்.

பெயர்ச் சொற்கள்

தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் பின்வருவன முன்னிலைச் சொற்களாகும்.

  • நீ - (ஒருமை)
  • நீர் - (மரியாதை ஒருமை / பன்மை)
  • நீவிர் - (பன்மை)
  • நீங்கள் - (பன்மை)

வேற்றுமை உருபேற்றம்

வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது மேற்படி சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.

வேற்றுமைஉருபுசொல்
1-நீநீர்நீங்கள்
2உன்னைஉம்மைஉங்களை
3ஆல்உன்னால்உம்மால்உங்களால்
4குஉனக்குஉமக்குஉங்களுக்கு
5இன்உன்னின்உம்மின்உங்களின்
6அதுஉனதுஉமதுஉங்களது

வினைச் சொற்கள்

தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறும். இவற்றுள் முன்னிலை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

-இறந்த காலம்நிகழ் காலம்எதிர் காலம்
ஒருமைசெய்தாய்செய்கிறாய்செய்வாய்
பன்மைசெய்தீர்செய்கிறீர்செய்வீர்

(மரியாதை)
செய்தீர்கள்செய்கிறீர்கள்செய்வீர்கள்

வெளிப் பார்வை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.