இடம் (இலக்கணம்)
தமிழ் இலக்கணம் மூவிடங்களைப் பற்றிக் கூறுகிறது. அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்பனவாகும்.
மூவிடப்பெயர்கள்
தன்மைப் பெயர்கள் - நான், யான், நாம், யாம், நாங்கள்.
முன்னிலைப் பெயர்கள் - நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள், எல்லீர்.
படர்க்கைப் பெயர்கள் - அவன், அவள், அவர், அது, அவை.
தன்மை, முன்னிலைப் பெயர்கள், ஒருமை பன்மையை உணர்த்துவன. படர்க்கைப் பெயர்கள் திணை, பால், எண் ஆகியவற்றையும் உணத்திவரும்.
"தன்மை யான்நான் யாம்நாம் முன்னிலை
எல்லீர் நீயிர் நீவிர் நீர்நீ
அல்லன படர்க்கை எல்லாம் எனல்பாெது". (நன்: நுாற்பா: 285)
பார்வை நுால்
- நன்னுால் விருத்தியுரை, ப.எண்: 257
பதிப்பாசிரியர்: புலவர் ச. சீனிவாசன், எம்.ஏ,
வெளியீடு: வசந்தா பதிப்பகம், சென்னை - 88
- ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநுால் ப.எண்: 49,50
தமிழ்நாட்டுப் பாடநுால் நிறுவனம், முதற்பதிப்பு - 1988.
- தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி? ப.எண் 21,22
எஸ். ஆர். காேவிந்தராஜன் எம்.ஏ., பி.டி.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.